அதிக விக்கெட் எடுத்து மேன் ஆஃப் தி சீரிஸ் அவார்ட் அடிப்பேன் – ஹாரிஸ் ரவுப் அதிரடி சவால்!

0
192
Rauf

நேற்று ஆசியக் கோப்பையின் இரண்டாவது சுற்று முதல் போட்டியில் லாகூர் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது!

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணியின் டாப் ஆர்டருக்கு பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் பெரிய செக் வைத்தார்கள்.

- Advertisement -

குறிப்பாக ஹாரிஸ் ரவுப். அவர் தன்னுடைய முதல் ஸ்பெல்லிங் இரண்டு விக்கெட்டுகள் அதிரடியாக வீழ்த்தினார். பின்பு திரும்பி வந்து 35 ஓவர்கள் தாண்டி கையில் எடுத்த முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டை வீழ்த்த, அந்த இடத்திலேயே பங்களாதேஷ் அணி சுருண்டு விட்டது. அவர்களால் 200 ரன்களையே கடக்க முடியவில்லை.

194 என்கின்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு இமாம் உல் ஹக் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் பொறுப்புடன் சிறப்பாக விளையாடி அரை சதங்களை எடுத்துக் கொடுக்க பாகிஸ்தான அணி எளிதாக 40 ஓவர் களுக்கு முன்பே வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி இதுவரை இந்த ஆசிய கோப்பை தொடரில் மூன்று போட்டிகள் விளையாடி இருக்கிறது. இதில் நேபாள் அணியுடனான முதல் போட்டியில் 2, இந்தியா உடன் 3, பங்களாதேஷ் அணியுடன் 4 என மொத்தம் மூன்று போட்டிகளில் 9 விக்கெட்டுகள் ஹாரிஸ் ரவுப் கைப்பற்றி இருக்கிறார்.

- Advertisement -

இந்த தொடரில் அவரே அதிக விக்கெட்டுகள் இதுவரை கைப்பற்றிய பந்துவீச்சாளராக முதல் இடத்தில் இருக்கிறார். இதற்கு அடுத்து இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தில் தலா 7 விக்கெட்டுகள் கைப்பற்றி நசீம் ஷா மற்றும் ஷாகின் ஷா அப்ரிடி இருக்கிறார்கள்.

நேற்று ஆட்டநாயகன் விருது பெற்ற ஹாரிஸ் ரவுப் பேசுகையில் “இங்கு வெப்பமாக இருந்தது. ஆனால் நான் இங்கு நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். பி எஸ் எல் தொடரில் லாகூர் அணிக்காக விளையாடுகிறேன். நாங்கள் இங்கு விளையாட வேண்டும் என்று எப்பொழுதும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

நாங்கள் ஒரு போட்டிக்கு முன்பாக பந்துவீச்சு குழுவாக சேர்ந்து எப்படி பந்து வீச வேண்டும்? என்று திட்டமிடுவோம். போட்டியில் ஒவ்வொரு கட்டத்திலும் எப்படி பந்துவீச்சு திட்டத்தை அமைக்க வேண்டும் என்றும் பேசுவோம். ஹார்டு லென்த்தை இங்கு வீசுவது கடினமாக இருந்தது.

மேலும் பந்தை ஸ்டெம்புக்கு வீச வேண்டிய திட்டத்தை வைத்திருந்தோம். அதனால் யார்க்கர் வீச வேண்டிய அவசியம் உருவாகவில்லை. நான் கடினமாக உழைக்கிறேன். எனக்காக அதிக இலக்குகளை வைத்திருக்கிறேன். இந்த ஆசியக் கோப்பை தொடரில் நான் தொடர் நாயகனாக வரவேண்டும் என்று விரும்புகிறேன். மேற்கொண்டு போட்டி எப்படி நடக்கிறது? என்று பார்ப்போம் என்று கூறி இருக்கிறார்!