உலக கோப்பையில் விராட் கோலியின் பேட்டிங் இடம் மாறுகிறதா? – ரோகித் சர்மா பேட்டி

0
860
Rohitsharma

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி நேற்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் விளையாடியது!

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முகேஷ் குமார் அறிமுகமாக, இஷான் கிஷான், குல்தீப் யாதவ் ஆகியோர் விளையாடும் அணியில் வாய்ப்பு பெற்றார்கள்.

- Advertisement -

களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எந்த ஒரு பேட்ஸ்மேன்களும் சரியான பங்களிப்பை தரவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் மட்டுமே தாக்குப் பிடித்து விளையாடி 43 ரன்கள் எடுத்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு கட்டத்தில் 85 ரண்களுக்கு மூன்று விக்கெட்டுகள் மட்டுமே இழந்திருந்து, அடுத்த 29 ரன்களுக்கு மீதி இருந்த ஏழு விக்கெட்டுகளை இழந்து 114 ரன்களுக்கு சுருண்டு தோற்றது.

பேட்டிங்கில் மற்றவர்களுக்கு வாய்ப்பு தரும் விதமாக ஆரம்பத்தில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி களம் இறங்கவில்லை. இஷான் கிஷான் அரை சதம் அடித்தார். இறுதியாக ஐந்து விக்கட்டுகள் மேல உள்ளே வந்த ரோஹித் சர்மா 12 ரன்கள் எடுக்க இந்திய அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை மாற்றப்பட்டது, இந்திய ரசிகர்களிடையே பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது. ரோஹித் சர்மா போட்டிக்கு பிறகு தன்னுடைய பேட்டியில், பேட்டிங் வரிசை ஏன் மாற்றப்பட்டது மற்றும் விராட் கோலி அதன் காரணமாக ஏன் களமிறங்கவில்லை என்பது குறித்து தெளிவுபடுத்தி இருக்கிறார்.

வெற்றிக்குப் பின் பேசிய கேப்டன் ரோஹித் சர்மா ” உண்மையைச் சொல்வது என்றால் ஆடுகளம் இப்படி மாறும் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. எங்களுக்கு முன்னால் ஒரு நல்ல ஸ்கோர் இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் ஆடுகளம் இப்படி மோசமாக செயல்படும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆடுகளத்தில் ஏதோ இருந்தது. இதன் காரணமாக நாங்கள் நினைக்காத விதத்தில் அவர்கள் குறைந்த ஸ்கோருக்கு ஆல் அவுட் ஆனார்கள்.

பேட்டிங் வரிசையை மாற்றியதற்கு காரணம் நாங்கள் எங்களுடைய வீரர்களுக்கு விளையாட வாய்ப்பு தர நினைத்தோம். ஆனால் நாங்கள் ஐந்து விக்கெட்டுகளை இழப்போம் என்று நினைக்கவில்லை. ஆனாலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க இது நல்ல ஒரு வாய்ப்பு. அவர்களை 114 ரன்கள் கட்டுப்படுத்தியதால் நாங்கள் கமாண்டிங் பொசிஷனுக்கு வந்தோம். எனவே இதன் காரணமாக அதிகம் விளையாடாதவர்களுக்கு ஒரு வாய்ப்பை தரலாம் என்று நினைத்தோம்.

முகேஷ் குமார் புத்திசாலித்தனமாக இருந்தார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் பந்தை ஸ்விங் செய்தார்.கொஞ்சம் வேகம் மற்றும் சீரானவர். அவரால் அணிக்கு என்ன தர முடியும் என்பதை பார்க்க நாங்கள் விரும்புகிறோம். அவரால் வெள்ளைப் பந்தில் என்ன செய்ய முடியும் என்று பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. மேலும் இஷான் கிஷான் பேட்டிங்கில் நன்றாக செயல்பட்டார்!” என்று கூறியிருக்கிறார்.

தற்பொழுது இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியை வென்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதற்கு அடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டி இன்றைய ஒருநாள் ஓய்வுக்குப் பிறகு நாளை நடைபெற இருக்கிறது. அடுத்த போட்டியில் டாஸ் வெல்லும் பட்சத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்!