ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணியின் அணுகுமுறை என்பது எப்பொழுதும் அனுபவ வீரர்களின் மீது முதலீடு செய்வதுதான். பெரும்பாலும் மாற்று வீரர்களுக்கு கூட அனுபவ வீரர்களையே சிஎஸ்கே அணி வாங்கும். இது அவர்களின் வெற்றி மந்திரமாகவே தொடர்ச்சியாக இருந்து வந்திருக்கிறது. இது மகேந்திர சிங் தோனியின் காலத்தின் அணுகுமுறை என்று கூறலாம்.
ஏனென்றால் தற்போது ருதுராஜ் புதிய கேப்டனாக வந்திருக்கிறார். எனவே இளம் வீரர்களைக் கொண்டு அடுத்த 10 ஆண்டுகளுக்கான அணியை உருவாக்க வேண்டிய அவசியம் சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்குஏற்பட்டிருக்கிறது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக சிஎஸ்கே அணி இளம் வீரர்கள் மேல் முதலீடு செய்ய ஆரம்பித்து இருக்கிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் மினி ஏலத்தில் இளம் வீரரான ரச்சின் ரவீந்திரவை வெளிநாட்டு வீரராக 1.80 கோடிக்கு வாங்கியது வாங்கியது. அதே சமயத்தில் உள்நாட்டு கிரிக்கெட் விளையாடும் 20 வயதான இளம் இந்திய வீரர் சமீர் ரிஸ்வியை 8.40 கோடி கொடுத்து வாங்கியது. சிஎஸ்கே அணி சர்வதேச அனுபவம் இல்லாத ஒரு இளம் இந்திய வீரருக்கு இவ்வளவு பெரிய பணம் கொடுத்தது எல்லோருக்கும் பெரிய ஆச்சரியத்தை உண்டு செய்து இருந்தது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்காக முதல் போட்டியிலேயே அவருக்கு விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் பேட்டிங் செய்யும் வாய்ப்பு வரவில்லை. இந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அவருக்கு கடைசியில் வாய்ப்பு கிடைத்தது. அவர் ரஷித் கானின் ஓவரில் தான் சந்தித்த முதல் பந்தையே சிக்ஸருக்கு அடித்தார். மேலும் அதே ஓவரில் இன்னொரு சிக்ஸரையும் அடித்து அட்டகாசப்படுத்தினார். நேற்று அவர் 6 பந்தில் 14 ரன்கள் எடுத்தார். இதனால் சிஎஸ்கே முகாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.
இதுகுறித்து சமீர் ரிஸ்வி பேசும்பொழுது “19 ஆவது ஓவரில் என்னை அனுப்பிய பொழுது, பந்து என்னுடைய ரேடாரில் இருந்தால் நான் பெரிய ஷாட்டுக்கு போக வேண்டும் என்று தெரியும். அதிர்ஷ்டவசமாக அந்த ஓவரில் நான் சந்தித்த முதல் பந்தே என்னுடைய ஸ்லாட்டில் இருந்தது. இதன் காரணமாக என்னை நம்பி நான் தூக்கி அடித்தேன், பந்து எல்லைக்கோட்டை தாண்டி சிக்சருக்கு செல்ல உதவியது.
இதையும் படிங்க : சிவம் துபே பேட்டிங்.. கடைசி நொடியில் ருதுராஜ் செய்த மாஸ் சேஞ்ச்.. இதான் சிஎஸ்கே
எனக்கு ஏதாவது சந்தேகம் ஏற்படும்போதெல்லாம், அருகில் உள்ள மூத்த வீரர்கள் மைதானத்திலோ அல்லது பேட்டிங் செய்யும்பொழுது எப்படியான அணுகுமுறையை கொண்டு இருப்பார்கள் என்று கேட்டு தெரிந்து கொள்கிறேன். மேலும் அவர்கள் பேட்டிங் செய்வதற்கு முன்பும் பின்பும் ஆக என்ன மாதிரி மனநிலையில் இருப்பார்கள் என்பதையும் தெரிந்து கொள்கிறேன். நான் இந்த விஷயங்களை கற்றுக் கொள்வதில் சிஎஸ்கே அணியில் பெரிய ஆர்வம் காட்டி வருகிறேன்”என்று கூறியிருக்கிறார்.