“விராட் கோலி ரெக்கார்டுக்காக விளையாடறாரா?.. அவர் இப்படியான ஆளா?!” – ராபின் உத்தப்பா முக்கியமான கருத்து!

0
820
Virat

இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி தற்பொழுது மிகப்பெரிய சச்சின் சாதனையை முறியடிக்கும் இடத்தில் இருக்கிறார்.

தற்பொழுது ஒரு நாள் கிரிக்கெட்டில் விராட் கோலி 48 சதங்கள் எடுத்திருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் மொத்தமாக ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்கள் எடுத்திருக்கிறார்.

- Advertisement -

நடப்பு உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 85 மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிராக 95 ரன்கள் என ஆட்டம் இழந்து இரண்டு சதங்களை தவறவிட்டிருக்கிறார்.

அதாவது விராட் கோலி சச்சின் சாதனையை இதே உலகக் கோப்பையில் முறியடித்திருக்கும் வாய்ப்பை தவறவிட்டு இருக்கிறார் என்று சொல்லலாம்.

இந்தத் தொடரில் ஐந்தாவது முறையாக இந்திய அணி ரன்னை சேஸ் செய்யும் இரண்டாவது பகுதியில் விளையாடியது. இதில் பங்களாதேஷ் எதிராக விராட் கோலி சதத்திற்காக விளையாடி இறுதியில் சதத்தை பெற்றார். வெற்றிக்கான ரன் தேவையும் அவரது சதத்திற்கான ரன் தேவையும் ஒரே அளவு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் அப்படியான ஒரு நிலையே இருந்தது. இந்த நேரத்தில் ஜடேஜா அவருக்கு ரன் எடுக்காமல் ஒத்துழைப்பு கொடுக்க, பதத்தை நோக்கி விளையாடிய விராட் கோலி இறுதியில் பந்தை தூக்கி அடித்து ஆட்டம் இழந்தார்.

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள ராபின் உத்தப்பா கூறும் பொழுது “விராட் கோலி ரெக்கார்டுகள் குறித்து அதிகம் யோசிப்பார் என்று நான் நினைக்கவில்லை. அவர் அணியை வெற்றிப் பக்கத்திற்கு கொண்டு சென்றதில் அவர் மகிழ்ச்சி அடைவார். ஒரு வீரர் ஓய்வு பெற்ற பிறகுதான் அவருடைய சாதனைகள் பார்க்கப்படும். விளையாடும் காலத்தில் வெற்றிதான் முக்கியமானது.

இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்களின் விராட் கோலி தலைசிறந்தவர் என்று நான் நினைக்கிறேன். நேற்றைய போட்டியில் அழுத்தத்தை உள்வாங்கும் ஒரு வீரர் அவருக்கு தேவைப்பட்டால். அவர்தான் ரவிந்திர ஜடேஜா. விராட் கோலி சிறந்ததை செய்யட்டும் அவருக்கு அதுவே வெற்றியைக் கொண்டு வந்திருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!