“2023 ஆம் ஆண்டின் உலக கோப்பைக்கு பிறகு விராட் கோலி விளையாடுவாரா”..? என்ன சொல்லி இருக்கிறார் கிரிஸ் கெயில்!

0
400

2023 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் வைத்து அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது . மொத்தமாக 46 நாட்கள் நடைபெறும் இந்த உலகக் கோப்பையில் 48 போட்டிகள் நடைபெற இருக்கின்றன . இந்தப் போட்டிகள் இந்தியாவில் இருக்கும் 10 நகரங்களில் வைத்து நடைபெற இருக்கிறது .

இதற்கான போட்டி அட்டவணையை ஐசிசி கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் வைத்து வெளியிட்டது. இந்த நிகழ்ச்சியில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் மற்றும் இலங்கை அணியின் சுழற் பகுதி வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்

- Advertisement -

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தங்களுடைய கிரிக்கெட் கேரியர் இன் கடைசி காலகட்டத்தில் இருப்பதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பிறகு இந்திய அணியில் பெரிய மாற்றம் நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது . கடந்த சில ஆண்டுகளாக ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வந்து விராட் கோலி கடந்த வருட ஆசிய கோப்பைக்கு பிறகு தன்னுடைய ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார் .

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் அடித்த சதத்திலிருந்து 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலிலும் முதலிடம் பெற்றார் . வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் போட்டிகளில் தனது சதத்தையும் பதிவு செய்தார் . டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அகமதாபாத்தில் சதம் எடுத்தார் நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் இறுதி ஆட்டங்களில் அடுத்தடுத்து இரண்டு சதங்களை விளாசி கிரிக்கெட் உலகின் ராஜா நான் தான் என மீண்டும் நிரூபித்திருக்கிறார் .

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் அதிரடி வீரர் மற்றும் யுனிவர்சல் பாஸ் என்று அழைக்கப்படும் க்ரிஷ் கெயில் விராட் கோலியின் எதிர்காலம் பற்றிய தனது கணிப்பை தெரிவித்துள்ளார் . ஆர்சிபி அணிக்காக 2011 ஆம் ஆண்டு முதல் விராட் கோலி மற்றும் கிரிஷ் கெயில் இருவரும் இணைந்து விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

இது பற்றி பேசி இருக்கும் கெயில் ” என்னுடைய கருத்துப்படி நிச்சயமாக விராட் கோலிக்கு இது கடைசி உலக கோப்பை இல்லை . அவர் 2027-ம் ஆண்டு உலக கோப்பையிலும் விளையாடுவார் அதற்கான திறமையும் உணர் தொகுதியும் அவரிடம் இருக்கிறது . உலகக் கோப்பை இந்தியாவில் வைத்து நடைபெறுவதால் இந்திய அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக நினைக்கிறேன் . இந்திய அணி எவ்வாறான ஒரு அணியை உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப் போகிறது என்பதை பார்க்கவும் ஆர்வமாக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” எல்லா வீரர்களுக்கும் கடினமான ஒரு காலம் வரும் . அந்தக் காலத்தை நிச்சயமாக கடந்து சாதித்து காட்டுவார்கள் . அதுதான் உலகின் சிறந்த வீரர்களின் செயல்பாடு . அதைத்தான் விராட் கோலியும் செய்து கொண்டிருக்கிறார் விராட் கோலி உடலளவிலும் மனதளவிலும் உறுதியான ஒரு வீரர் . அவர் நிச்சயமாக இந்த உலகக் கோப்பையில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்துவார் . இந்தியாவிற்கு அவரது ஆட்டம் முக்கியமான ஒன்று” என்று தெரிவித்தார் .