இன்று மேட்ச் நடக்குமா நடக்காதா?.. இந்திய அணிக்கு என்ன பாதிப்பு? – பத்ரிநாத் தைரியமான பதில்!

0
405
Badrinath

பதினாறாவது ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது சுற்றுப்போட்டிகள் தற்பொழுது இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்று வருகின்றன!

இந்த மைதானத்தில் இலங்கை பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி முழுவதுமாக நடைபெற்றது. அந்த போட்டியில் வென்று இலங்கை தற்போது முன்னிலை வகிக்கிறது!

- Advertisement -

இந்த நிலையில் இதே மைதானத்தில் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருந்த இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நேற்று மழையின் காரணமாக நிறுத்தப்பட்டது.

இந்த ஒரு போட்டிக்கு மட்டும் முக்கியத்துவம் அதிகம் இருக்கின்ற காரணத்தினால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ரிசர்வ் நாளை அறிவித்தது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் இந்த முடிவும் விமர்சனத்துக்குரியதே.

இந்த நிலையில் இன்று ரிசர்வ் நாளில் போட்டி முழுமையாக நடைபெறுமா? இல்லை குறைக்கப்பட்ட ஓவராக நடைபெறுமா? குறைந்தபட்சம் போட்டி துவங்கி ஒரு பத்து இருபது ஓவராவது வீசுவார்களா? என்று ரசிகர்களிடையே பல கேள்விகள் இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது தொலைக்காட்சியில் கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வரும் இந்திய மற்றும் தமிழக கிரிக்கெட் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் இது குறித்து மிகவும் வெளிப்படையாக, அதே சமயத்தில் வருத்தமாக தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“காலையில் எழுந்து இந்தியா பாகிஸ்தான் போட்டி பற்றி பேசலாம் என்று வந்தால் இங்கு மழை பெய்து கொண்டிருக்கிறது. இதற்கு முன்னால் பிட்ச் ரிப்போர்ட் வரை மழை கிடையாது. ஆனால் அதற்கு அடுத்த அரைமணி நேரத்தில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இயற்கையை நம்மால் எதுவும் செய்ய முடியாது.

அதே சமயத்தில் நிகழ்ச்சியை வழங்குவதற்காக வந்த எனக்கு இப்படியான இடையூறுகள் மனநிலையை பாதிக்கிறது. அப்படி இருக்கும் பொழுது விளையாடும் வீரர்களுக்கு இது நிச்சயம் மனநிலையை பாதிக்கும்.

மேலும் இந்த நாளுக்கு அடுத்து இந்திய அணியினர் இந்தத் தொடரில் மிக முக்கியமான போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாட இருக்கிறார்கள். இன்றும் விளையாடி அந்த போட்டிகளை அவர்கள் எதிர்கொள்வது கடினமாக இருக்கும். எனவே இன்றைய போட்டி நடக்காமல் இருப்பதே நல்லது. இன்னொரு பக்கத்தில் வெளிப்படையாக சொல்கிறேன் இன்று போட்டி நடக்காது!” என்று வெளிப்படையாக தைரியமாக கூறியிருக்கிறார்!