இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சூரியகுமார் வெளியே போகிறாரா? இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்!

0
1172
ICT

2023 நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை நாக்பூரில் வைத்து 132 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது!

இதை அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் பிப்ரவரி 17ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியில் குறைந்தது மூன்று மாற்றங்களாவது இருப்பதற்கு மிக அதிகபட்ச வாய்ப்புகள் நிலவுகிறது!

- Advertisement -

இந்திய அணியை பொறுத்தவரை தற்பொழுது வரை இருந்த நிலை என்னவென்றால், கே எல் ராகுலின் இடத்தில் கில் வருவாரா என்பது மட்டும்தான்.

ஆனால் சற்று முன் வந்த செய்திப்படி ஸ்ரேயாஸ் உடல் தகுதியை எட்டி இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான தகுதியோடு இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளது. இதன்படி பார்த்தால் சூரியகுமார் வெளியே போய் இவர் விளையாடும் அணியில் இருப்பதற்கே அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் கே.எல். ராகுலுக்கு இன்னொரு வாய்ப்பு தரப்படும் என்று தெரிகிறது!

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இந்திய அணி!

- Advertisement -

கே எல் ராகுல், ரோகித் சர்மா, புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ், ரவீந்திர ஜடேஜா, கே எஸ் பரத், அஸ்வின், அக்சர் படேல், முகமது சமி, முகமது சிராஜ்.