இரண்டு போட்டியிலும் கோல்டன் டக் அடித்த சூரிய குமாருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? ரோகித் சர்மா வெளிப்படையான பதில்!

0
244
Rohitsharma

இன்றைய நவீன கிரிக்கெட் வடிவமான டி20 கிரிக்கெட்டில் முடி சூடா ராஜா என்றால் அது இந்திய அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ்தான்!

இந்த வடிவ கிரிக்கெட்டில் நடு வரிசையில் வந்து 180 ஸ்ட்ரைக் ரேட்டில், மைதானத்தின் எல்லாப் புறங்களிலும் அசாத்தியமான கிரிக்கெட் ஷாட்களை விளையாடக்கூடிய பேட்ஸ்மேன் உலகத்தில் இதுவரை கிடையாது!

- Advertisement -

ஆனால் அப்படியே வெள்ளைப் பந்தில் நீண்ட வடிவ கிரிக்கெட் ஆன ஒருநாள் கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் சூரியகுமார் மிகவும் சராசரியான வீரருக்கும் கீழே போய்க் கொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மை.

தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதலில் நடைபெற்றுள்ள இரண்டு போட்டிகளிலும் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஒரே மாதிரி ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்திருக்கிறார்.

ஸ்ரேயாஷ் முதுகுப் பகுதியில் காயம் அடைந்ததை தொடர்ந்து ஆடும் அணியில் இடம் பெற்ற சூரிய குமாருக்கு அடுத்த வாய்ப்பு கிடைக்குமா என்று இந்திய ஆணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேட்ட பொழுது அவர் சில முக்கியமான கருத்துக்களை வெளிப்படையாகப் பகிர்ந்து இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து ரோஹித் சர்மா பேசும்பொழுது ” ஸ்ரேயாஷ் திரும்புவது பற்றி எங்களுக்கு தெரியாது. இந்த நேரத்தில் அணியில் ஒரு இடம் காலியாக உள்ளது. அந்த இடத்தில் சூரிய குமாரை விளையாட வைத்திருக்கிறோம். வெளிப்படையாக அவர் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் நிறைய திறன்களை வெளிப்படுத்தி இருக்கிறார். நான் ஏற்கனவே பலமுறை கூறியுள்ளேன், அது திறமையுள்ள தோழர்களுக்கு வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்படும்!” என்று கூறினார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” நிச்சயமாக சூரிய குமாருக்கு இந்த நீண்ட வடிவ வெள்ளை பந்து கிரிக்கெட்டில் என்ன செய்ய வேண்டும் என்று நன்றாகவே தெரியும். சம்பந்தமாக அவருடைய மனதிலும் விஷயங்கள் இருக்கின்றன என்று நான் நினைக்கின்றேன். நான் முன்பே சொல்லியது போல் திறமை உடைய தோழர்கள் அதற்கேற்றார் போல் செயல்படுவார்கள். மேலும் இந்த குறிப்பிட்ட வடிவத்தில் அவருக்கு நாங்கள் பெரிய வாய்ப்புகளை இன்னும் கொடுத்து விடவில்லை என்பதும் உங்களுக்கு தெரியும்!” என்று கூறியிருக்கிறார்.

அடுத்து பேசிய ரோஹித் சர்மா ” ஆமாம் அவர் தற்பொழுது நடந்த இரண்டு ஆட்டங்களிலும் அதற்கு முன்னரும் சீக்கிரத்தில் ஆட்டம் இழந்து இருக்கிறார். அவருக்கு ரன் தேவைப்படுகிறது. அவர் இன்னும் ஏழு எட்டு ஆட்டங்கள் வாய்ப்பு தேவை. அதற்குப் பின்பு அவர் வசதியாக உணர்வார். இப்பொழுது காயத்தால் ஒரு வீரர் விளையாட வில்லை அவரது இடத்தில் ஒரு வீரர் தேவைப்படுகிறார். அவர் வந்து சரியான ரன்கள் எடுத்து திறமைக்கு தகுந்தவாறு செயல்பட்டால் தொடர் வாய்ப்புகளை பெறுவார். அப்படி இல்லை அவர் சிரமப்படுகிறார் என்றால் அந்த இடத்திற்கு நாங்கள் வேறு யாரையாவது யோசிப்போம். ஆனால் தற்போது அப்படியான நிலை இல்லை!” என்று கூறி முடித்திருக்கிறார்.