2024 ஐபிஎல் ரிஷப் பண்ட் விளையாடுவாரா?.. டெல்லி அணி நிர்வாகம் வெளியிட்ட தகவல்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

0
127
IPL

ஐபிஎல் 17வது சீசன் வருகின்ற மார்ச் மாதம் இறுதியில் ஆரம்பிப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நடைபெற்று மே மாத இறுதியில் முடிவடையும்.

மோசமான சாலை விபத்தில் சிக்கி கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மறுவாழ்வில் இருந்து வரும் இந்திய விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், வருகின்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக களம் இறங்குவாரா? என்கின்ற கேள்வி இருந்து வருகிறது.

- Advertisement -

இவர் கடந்த வருடத்தின் இறுதியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். அப்பொழுது அந்த பயிற்சி முகாமில் டெல்லி கேப்பிட்டல்ஸ் பயிற்சியாளர் கங்குலியும் இருந்தார். அவர் ரிஷப் பண்ட் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்பதாக கூறியிருந்தார்.

மேலும் நடைபெற்ற முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் இங்கிலாந்தின் ஹாரி புரூக் 4 கோடி, ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர் ஜய் ரிச்சர்ட்சன் 5 கோடி, வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஷாய் ஹோப் 75 லட்சம், அன்கேப்டு இந்திய விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் குமார் குஸ்கரா 7.2 கோடி எனக்கு கொடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் வாங்கி இருக்கிறது.

இந்த நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகத்தின் உயர் அதிகாரியான சாகர் ரிஷப் பண்ட் வருகின்ற ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்பது குறித்தான நம்பிக்கையான தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “அவர் இந்த வருடம் விளையாடுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவர் மிகப்பெரிய வீரர், அவர் எங்களுக்கு விளையாடினால் அதுநல்லதாக அமையும். எங்கள் பயிற்சியாளர்கள் மற்றும் பிசியோ அவருடன் வேலை செய்கிறார்கள். இதில் சிறந்த விஷயம் என்னவென்றால் அவர் மிக வேகமாக குணமடைந்து வருகிறார்.மார்ச் மாதத்திற்குள் அவர் எங்களுக்கு தேவையான அளவிற்கு இருப்பார் என்று நம்புகிறோம்.

இந்த ஆண்டு சவுதி அரேபியா ஐஎல்டி தொடரில் எங்கள் அணிக்கு டேவிட் வார்னரை கொண்டு வந்திருக்கிறோம். அவர் எங்களுடன் இருந்து பல சிறப்பான விஷயங்களை செய்வார் என்று நம்புகிறோம்.

எங்களுக்கு ஹாரி ப்ரூக் மிடில் வரிசையில் விளையாட வேண்டும் என்று விரும்புகிறோம். இந்திய விக்கெட் கீப்பிங் இளம் பேட்ஸ்மேன் குமார் குஸ்கராவை எங்கள் அணியில் சேர்த்ததின் மூலம் அணியைப் பலப்படுத்தி இருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.