பவுலர்கள் செய்யும் ரன் அவுட்டை ஆதரிக்க மாட்டேன்; ஜோஸ் பட்லர் அதிரடி கருத்து!

0
88
Butler

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி சமீபத்தில் இங்கிலாந்து நாட்டிற்கு தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட சுற்றுப்பயணம் செய்தது. இதில் டி20 தொடரை இந்திய அணி. ஆனால் ஒருநாள் போட்டி தொடரை 3-0 என முழுவதுமாக கைப்பற்றி அசத்தியது!

மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வெற்றி ஒரு பெரிய சர்ச்சையை உருவாக்கி விட்டது. இந்தியா நிர்ணயித்த இலக்கை நோக்கி இங்கிலாந்தின் கடைசி விக்கெட் மிக வேகமாக முன்னேறியது, அந்தச் சமயத்தில் இந்திய அணியின் பந்துவீச்சாளர் தீப்தி சர்மா, பந்து வீசுவதற்கு முன் வெளியே சென்ற இங்கிலாந்து அணியின் சார்லி டீனை ரன் அவுட் செய்தார். இப்படியான இந்த ரன் அவுட் ஆட்டத்தின் உத்வேகத்தை பாதிக்கும், இது தவறு என்று இங்கிலாந்து நாட்டில் இருந்து பெரிய எதிர்ப்பு கிளம்பியது.

இந்தியா திரும்பிய இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தீப்தி சர்மா இது பற்றி கூறிய பொழுது ” நாங்கள் பலமுறை எச்சரிக்கை செய்தும் அவர் கேட்கவில்லை. நாங்கள் நடுவர் இடமும் இதுபற்றி புகார் செய்தோம். அதற்குப் பிறகு வேறு வழியில்லாமல், கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டு, வழிகாட்டுதலோடு இதைச் செய்தோம் ” என்று கூறியிருந்தார். அதேசமயத்தில் இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் “நீங்கள் வெற்றி பெற்றதை காயப்படுத்த புகார் அளித்தோம் என்று சொல்லாதீர்கள்!” என்று காட்டமாகத் தெரிவித்திருந்தார்.

தற்போது இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. அங்கு இங்கிலாந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் இடம் இந்த ரன் அவுட் முறை குறித்து கேட்கப்பட்டது. இவர் ஐபிஎல் தொடரில் இப்படியான ரன் அவுட் முறையில் இந்திய வீரர் அஸ்வினால் வெளியேற்றப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி ஜோஸ் பட்லர் கூறும்பொழுது
” இல்லை இதற்கு என் ஆதரவு இல்லை. நான் அப்படி நடந்தால் பேட்ஸ்மேனை திரும்ப விளையாட அழைப்பேன். அப்படியான விஷயங்களை யாரும் விரும்புவதில்லை. பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு இடையே நடக்கும் சண்டை மற்றும் ஒரு பேச்சு புள்ளியை உருவாக்கதான் விரும்புகிறார்கள். இவை எப்போதும் விரும்பத்தகாத நேரங்களில் நடக்கிறது. இந்த விதி உருவாக்கப்பட்டுள்ளது எதற்கு என்று நான் புரிந்து கொள்கிறேன். அதே சமயத்தில் இந்த விதியில் உள்ள பாதகங்கள் பற்றியும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த முறையில் அவுட் செய்யப்படுவது தவறானது ” என்று கூறியிருக்கிறார். மேலும் இவரது கருத்தையே மொயீன் அலியும் கூறியிருக்கிறார்!