நான் எந்த பவுலரையும் பார்க்க மாட்டேன் ; பந்தை மட்டும்தான் பார்ப்பேன்; இல்லனா ரன் அடிக்க முடியாது – ஜெய்ஸ்வால் மாஸ் பேட்டி!

0
197
Jaiswal

நடப்பு ஐபிஎல் தொடரில் எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும் வீரராக 21 வயதான ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் ஜெய்ஸ்வால் இருக்கிறார்.

இந்த ஐபிஎல் தொடரில் இவர் ஒன்பது போட்டிகளில் 160 ஸ்ட்ரைக் ரேட்டில் 428 ரன்கள் குவித்து, அதிக ரன் குவித்தவர்களில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

தனது கடைசி ஆட்டத்தில் மும்பைக்கு எதிராக மிகச் சிறப்பாக விளையாடி தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார். அந்தப் போட்டியில் ஆர்ச்சர்க்கு எதிராக 11 பந்துகளில் 21 ரன்களையும் அதில் மூன்று சிக்ஸர்களையும் விளாசி இருந்தார்.

ஒரு குறிப்பிட்ட பந்துவீச்சாளரைத் தேர்ந்தெடுத்து அடிக்கிறீர்களா என்று கேட்டதற்கு ஜெய்ஸ்வால் “நான் எந்த ஒரு பந்துவீச்சாளர்களுக்கும் தயாராவது கிடையாது. நான் ஒரு பந்துக்குதான் தயாராவேன். அந்த சூழ்நிலை அங்குள்ள பவுன்ஸ் மற்றும் வேகத்திற்கு நான் தயாராக வேண்டும். அவ்வளவுதான் நான் செய்கிறேன். ஒரு மோசமான பந்து என்றால் அதை நான் தண்டிக்க வேண்டும். நல்ல பந்து என்றால் அதற்கு நான் மதிப்பளிக்க வேண்டும். இப்படி நான் என் மனதில் தெளிவாக இருக்க வேண்டும்.

இப்படி இல்லாவிட்டால் நான் ஒரு பந்தை சிக்ஸர் இல்லை சிங்கிளாக எப்படி மாற்றுவது? என்று யோசித்துப் பாருங்கள். நான் நினைப்பது ஒரு பந்தை எங்கு விளையாடலாம் எந்த ஷாட் விளையாடலாம் என்பதைப் பற்றிதான். நான் வேறு எதையும் யோசிப்பது இல்லை.

- Advertisement -

நான் ஜஸ்ட் பந்துக்கு விளையாடுகிறேன். நான் பயிற்சியின் போது பலவிதமான பீல்ட் செட்டிங் வைத்து அதற்கு ஏற்றபடி அடித்து பயிற்சி செய்கிறேன். நான் எங்கு பெரிய ரண்களை எடுக்க முடியும்? எங்கு அதிக வாய்ப்புகளை எடுக்க வேண்டும்? என்று எனக்கு நன்றாக தெரியும். இது திறமை மற்றும் தந்திரோபாயம் பற்றியது. நான் வித்தியாசமான ஷாட்களை தேடிக் கொண்டே இருப்பேன். எல்லா நேரத்திலும் வெவ்வேறு விஷயங்களை முயற்சி செய்கிறேன்.

இந்த வருடம் பல இடங்களில் சென்று விளையாட வேண்டி இருக்கும் எனவே நான் பயிற்சியிலேயே ராஜஸ்தான் அகாடமியின் பல இடங்களுக்கு சென்று விளையாடினேன். இந்த தொடரில் இது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. எனக்கு இப்படி விளையாடுவது பிடித்தமான ஒன்று!” என்று கூறியிருக்கிறார்!