கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

இந்திய அணியின் பயிற்சியாளராக தோனி வருவாரா? ஆகாஷ் சோப்ரா சொன்னதை பாருங்க

தோனி எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்க மாட்டார் என்பதற்கான காரணங்களை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா விளக்கியுள்ளார். தோனி ஏற்கனவே 2021 டி20 உலகக் கோப்பையின்போது இந்திய அணிக்கு மெண்டராக பணியாற்றியுள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர்,”இது ஒரு முக்கியமான விஷயம். தோனி இதில் ஆர்வம் காட்டுவார் என்று நான் நினைக்கவில்லை. பயிற்சியாளர் பணி என்பது கடினமானது. பயிற்சியாளராக இருப்பது, விளையாடும்போது இருந்ததைப் போலவே உங்களை பிஸியாக வைத்திருக்கும்.சில நேரங்களில் அதைவிடவும் அதிகமாக இருக்கும். உங்களுக்கு குடும்பம் இருக்கிறது.”

10 மாத கடமை:

“நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரே வேலையை செய்துவிட்டு, பயணப் பெட்டியுடன் வாழ்ந்துவிட்டு, இப்போது அந்த வேலையை செய்ய விரும்ப மாட்டீர்கள். அதனால்தான் பல வீரர்கள் பயிற்சியாளர் பணியில் ஈடுபடுவதில்லை. ஈடுபட்டாலும் அது இரண்டு மாத ஐபிஎல் பணியாக மட்டுமே இருக்கும். ஆனால், முழுநேர இந்திய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றால், அது ஆண்டுக்கு 10 மாத கடமையாக இருக்கும்.”

“தோனிக்கு அவ்வளவு நேரம் இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. அவருக்கு அவ்வளவு நேரம் இருந்தால் நான் ஆச்சரியப்படுவேன்” என்று ஆகாஷ் சோப்ரை கூறினார்.
அதே வீடியோவில், சோப்ரா குல்தீப் யாதவின் தற்போதைய சர்வதேச கிரிக்கெட் நிலை குறித்தும் பேசினார். குல்தீப் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் நீண்ட காலமாக அணியில் இடம்பெறாமல் இருப்பதை சுட்டிக்காட்டினார்.

- Advertisement -

குல்தீப்க்கு வயதாகிறது:

குறிப்பாக, சமீபத்தில் முடிவடைந்த ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடிய ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் குல்தீப் இடம்பெறவில்லை. இது குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, “குல்தீப் யாதவுக்கு ஆதரவாக உணர வேண்டும். இல்லையென்றால், நீங்கள் உண்மையான இந்திய கிரிக்கெட் ரசிகர் இல்லை. 5 ஆண்டுக்கு முன் சிட்னியில் ஒரு டெஸ்ட் போட்டியில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.”

இதையும் படிங்க: இந்திய அணிக்கு அடுத்த பயிற்சியாளராக.. என்னுடைய நண்பர் இவர்தான் வரணும் – புஜாரா விருப்பம்

“அப்போதைய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, அவர் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் எங்கள் முதன்மை சுழற்பந்து வீச்சாளர் என்று கூறியிருந்தார்.அதன் பிறகு, அவர் வெளிநாட்டில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். நான் மிகவும் ஆச்சரியப்படுகிறேன், ஏமாற்றமடைகிறேன், சற்று விரக்தியும் அடைகிறேன். எட்டு ஆண்டுகளாக அவர் போட்டிகளில் விளையாடவில்லை. அவர் வயதாகிவிடுவார்” என்று சோப்ரா கூறியுள்ளார்.

- Advertisement -
Published by

Recent Posts