2023 ஐபிஎல் தொடரில் ஜோஸ் பட்லருக்கு இந்த சாதனைகள் வசப்படுமா ?

0
118

பதினாறாவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர்  நாளை அகமதாபாத்தில் தொடங்க இருக்கிறது. இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்  குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோத இருக்கின்றன .  மார்ச் 31ஆம் தேதி துவங்கும் ஐபிஎல் போட்டிகள்  மே 28ஆம்  தேதியுடன் முடிவடைகிறது. மொத்தம் 24 போட்டிகளைக் கொண்ட இந்த கிரிக்கெட் திருவிழா  59 நாட்கள் நடைபெற உள்ளது .

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் போட்டிகள் நாளை தொடங்க உள்ள நிலையில் உலக கிரிக்கெட்டின் முன்னணி ஆட்டக்காரர்களும் நட்சத்திர வீரர்களும் இதில் கலந்துகொண்டு விளையாட இருக்கின்றனர். இங்கிலாந்து அணியின் வெள்ளைப் பந்து கிரிக்கெட் வடிவத்தின் கேப்டன் ஜோஸ் பட்லர் முக்கியமான வீரர் ஆவார்.

- Advertisement -

2016ம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் இவர் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அதிகமான ரன்களை குவித்த வீரர் இவர் தான். 17 போட்டிகளில் ஆடிய இவர் 863 ரன்களை குவித்தார். இதில் நான்கு சதங்கள் அடங்கும். ஐபிஎல் போட்டிகளில் மூன்று வீரர்கள் மட்டுமே ஒரே சீசனில் இன்னொரு ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர். அவர்களில் முதலிடத்தில் இருப்பவர் விராட் கோலி இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் 973 ரன்கள் எடுத்திருந்தார் . கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 863 ரன்களை குவித்த ஜோஸ் பட்லர் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் . டேவிட் வார்னர் 2016 ஆம் ஆண்டு 748 ரன்களை எடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளார் .

16 வது ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் எந்த சாதனைகளை நிகழ்த்த வாய்ப்பு இருக்கிறது என பார்க்கலாம் .

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 150 சிக்ஸர்கள்:
2016 ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் ஜோஸ் பட்லர் 81 போட்டிகளில் ஆடி 135 சிக்ஸர்களை அடித்திருக்கிறார். இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த ஒரு வீரர் ஐபிஎல் போட்டிகளில் அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும். இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரில் 15 சிக்ஸர்களை அடித்தால் 150 சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற பெருமை ஜோஸ் பட்லருக்கு கிடைக்கும். இதன் மூலம் 150 சிக்ஸர்களை அடித்த வெளிநாட்டு வீரர்களின் பட்டியலில் ஏழாவது இடத்தை பெறுவார் .

- Advertisement -

ஐபிஎல் போட்டி தொடர்களில் 3000 ரன்கள் :
81 ஐபிஎல் போட்டிகளில் ஆடி இருக்கும் பட்லர் 2831 ரன்கள் குவித்திருக்கிறார். இவரது சராசரி 40 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 150.. இந்தத் தொடரில் 169 ரன்களை எடுத்தால் ஐபிஎல் போட்டிகளில் 3000 நாட்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெறுவார் ஜோஸ் பட்லர். இந்த வருட ஐபிஎல் தொடர்களில் 3000 ரகளை ஏற்றுவதன் மூலம் அதிவேகமாக 3000 ரகளை கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமை ஜோஸ் பட்லரை சாறும்.

ஐபிஎல் தொடரில் அதிக 100:
81 போட்டிகளில் ஆடி இருக்கும் ஜோஸ் பெட்லர் ஐபிஎல் போட்டி தொடர்களில் இதுவரை 5 செஞ்சுரிகளை எடுத்து இருக்கிறார். ஐபிஎல் தொடர்களில் அதிக சதங்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலியுடன் இரண்டாம் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தத் தொடரில் அவர் மேலும் இரண்டு சதம் எடுத்தால் ஐபிஎல் தொடரில் அதிக சதம் எடுத்த கிரீஸ் கெயிலின் சாதனையை முறியடித்து முதலிடத்தை பெறலாம்.