“இந்த முறை உலக கோப்பையை இந்தியா ஜெயிக்குமா?” – கடுப்பான அஷ்வின் கோபமான பதில்!

0
550
Ashwin

இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் ஐசிசி கோப்பையை 1983 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் கபில்தேவ் தலைமையில் வென்றது!

இதற்குப் பிறகு இந்திய அணி அடுத்த உலக கோப்பையை வெல்ல ஏறக்குறைய 28 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் அணிக்கும், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றுவது என்பது ஒரு மிகப்பெரிய கனவாக இருந்தது!

- Advertisement -

2007 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் முதல் சுற்றில் இந்திய அணி தோற்று வெளியேறி வந்த பிறகு ஏற்பட்ட மாற்றத்தில் கேப்டனாக வந்த மகேந்திர சிங் தோனியின் தலைமையின் கீழ் எழுச்சி பெற்ற இந்திய கிரிக்கெட் அணி, 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்றி, இந்தியர்களின் உலகக் கோப்பை வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது!

ஆனால் இதற்குப் பிறகு இந்திய அணி எந்த ஒரு உலகக் கோப்பையையும் கைப்பற்றவில்லை. இதற்கு அடுத்து நடைபெற்ற மூன்று டி20 உலக கோப்பைகளில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இரண்டு 50 ஓவர் உலகக் கோப்பைகளில் தோல்வி அடைந்தது. இது மட்டும் இல்லாமல் இரண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப்பையும் இழந்தது.

நடுவில் மகேந்திர சிங் தோனி தலைமையில் ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை மட்டுமே 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் வைத்து இந்திய அணி கைப்பற்றி இருந்தது. இந்த வகையில் எடுத்துக் கொண்டால் ஒரு ஐசிசி தொடரை வென்று இந்திய அணி 10 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் இருக்கும் பெரும்பாலான பேச்சு இந்திய அணி ஒரு உலகக் கோப்பையை வெல்லுமா? அதற்கான தகுதியோடு இந்திய அணி இருக்கிறதா? என்பதாகத்தான் இருக்கிறது.

இது குறித்து தனது கருத்தை கொஞ்சம் காட்டமாகவே ரவிச்சந்திரன் அஷ்வின் முன் வைத்திருக்கிறார். அவர் தனது யூட்யூபில் இது சம்பந்தமாக மிக விலாவாரியாக பேசியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“மிக நிச்சயமாக இந்தியா இந்த முறை உலகக் கோப்பையை வெல்லுமா? என்பதுதான் சமூக வலைதளங்களில் பரபரப்பான பேச்சாக இருக்கும். இந்தியாவால் உலகக் கோப்பை வறட்சியை 10 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு கொண்டு வர முடியுமா? என்று இந்த தலைப்பில்தான் நாம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். இது மிகவும் அபத்தமானது நண்பர்களே!

இந்தியா ஒரு வலிமையான அணி. ஒரு சில காரணிகளை தவிர்த்து விட்டு பார்த்தால், இந்த முறை உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு மிகச் சிறந்த வாய்ப்பு இருக்கிறது. உண்மையில் நாங்கள் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு வெல்லக்கூடியவர்களாக சென்றோம்.

ஆனால் ஒவ்வொரு ஐசிசி நிகழ்விலும் அனைத்து அணிகளுக்குமே சம வாய்ப்புகள் இருக்கும்.நீங்கள் என்னிடம் கேட்கிறீர்கள், எந்த ஒரு கிரிக்கெட் போட்டியுமே 50 க்கு 50 என்றுதான் துவங்கும். ஆனால் இந்த முறை இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லக்கூடிய அணியாக இருந்து தொடங்கும்!” என்று கூறியிருக்கிறார்!