“141 ஆண்டுகால சாதனையை முறியடிக்குமா இந்தியா? 76 ரன்களில் சுருட்ட வாய்ப்பு இருக்கா? வரலாறு என்ன சொல்றது

0
562

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முன்றாவது டெஸ்ட் போட்டி கிளைமாக்ஸ் காட்சியை நெருங்கிவிட்டது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2க்கு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது இந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய அணி வெல்ல, வெறும் 76 ரன்கள் தான் தேவை.

- Advertisement -

76 ரன்களுக்குள் சுருட்ட வாய்ப்பு இருக்கிறதா? வரலாறு என்ன சொல்கிறது என்பதை தற்போது காண்போம். டெஸ்ட் கிரிக்கெட்டின் 141 ஆண்டுக்கால வராலாற்றில் இதுவரை குறைந்தபட்ச இலக்கை வெற்றிக்கரமாக தற்காத்து கொண்டதே 85 ரன்கள் தான்.

1882ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், அந்த அணிக்கு வெற்றி இலக்காக 86 ரன்களை ஆஸ்திரேலிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்தது.. அப்போது இங்கிலாந்து அணியை 77 ரன்களுக்கு ஆஸ்திரேலியா சுருட்டியதே இன்று வரை சாதனையாக உள்ளது.

இதனால் இந்திய அணி நாளை ஆஸதிரேலியாலை 76 ரன்களை எட்ட விடாமல் செய்தால், அது புதிய சாதனையாகும். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவை டெஸ்ட் போட்டியில் குறைந்த ஸ்கோரில் இந்திய அணி வீழ்த்தி இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

- Advertisement -

2004ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 107 ரன்களை இலக்காக 4வது இன்னிங்சில் ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா வெற்றி இலக்கை நிர்ணயித்தது. ஆனால் இந்தியாவின் அசத்தலான பந்துவீச்சால், ஆஸ்திரேலிய அணி 93 ரன்களுக்குள் இந்திய அணி சுருட்டி வெற்றி பெற்றது.

இதனால் நாளைய ஆட்டத்தின் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்றால் கவாஜா, டிராவிஸ் ஹேட், மார்னஸ், ஸ்மித் ஆகியோர் விக்கெட்டை இந்தியா வீழ்த்த வேண்டும். அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தங்களது அபாரமான செயல்பாட்டை வெளிப்படுத்தினால் மட்டுமே அது நடைபெறும். ஆனால் இப்படி நடைபெற வாய்ப்பு குறைவு தான்.

இந்தியா முதல் இன்னிங்சில் ஒரு 150 ரன்களை கடந்திருந்தால் கூட, தற்போது வெற்றி இலக்கு 100 ரன்களை தாண்டி இருந்திருக்கும். அப்போது பந்துவீச்சாளர்களுக்கும் மனதளவில் ஒரு நம்பிக்கை இருந்திருக்கும். எப்போதும் பந்துவீச்சாளர்களும், கீழ் வரிசை பேட்ஸ்மேன்களும் அணியை காப்பாற்றுவார்கள் என்று நினைத்தால், அது எப்படி முடியும்.