உள்ள போனா பெரிய சிக்ஸரா அடிப்பான்.. தோனி இடத்துக்கு இந்த பையன்தான்.. மும்பை இந்தியன்ஸ் வீரர் கணிப்பு!

0
3256
Dhoni

டி20 உலகக்கோப்பையில் இருந்து இந்திய அணியில் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்திருக்கிறது. ஒவ்வொரு கிரிக்கெட் வடிவத்திற்கும் ஒவ்வொரு உலகக் கோப்பைகள் முடிய இந்திய அணி மாற்றத்திற்கு உட்பட்டு கொண்டே வருகிறது. புதிய வீரர்கள் அணிக்குள் உள்வாங்கப்படுகிறார்கள்.

இந்த வகையில் தற்பொழுது ஐபிஎல் தொடர் முடிந்து ஜெய்ஸ்வால், திலக் வர்மா, முகேஷ் குமார் என இளம் வீரர்கள் இந்திய அணிக்குள் புதிதாக உள்ளே வந்திருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் அணி புதிய வீரர்களோடு புதிய பாதையில் செல்கின்ற காலகட்டத்தின் துவக்கத்தில் இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது அறிமுகமான இந்த வீரர்கள் மட்டும் இல்லாமல், அடுத்து நடக்க உள்ள அயர்லாந்துக்கு எதிரான தொடரில் சில வீரர்கள் புதிதாக இந்திய டி20 அணிக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். குறைந்தபட்சம் இரண்டு அணிகள் வெவ்வேறு இடங்களில் விளையாடும் அளவுக்கு தற்போது இளம் வீரர்கள் திறமையோடு வருகிறார்கள்.

தற்பொழுது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு துணை பயிற்சியாளராக இருந்து வரும் அபிஷேக் நாயர் மகேந்திர சிங் தோனியின் ஃபினிஷர் இடத்துக்கு யார் சரியாக இருப்பார்கள் என்று தனது கருத்தை முன்வைத்து பேசி இருக்கிறார். மேலும் இவர் ஆரம்பத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வெளியில் தெரிந்தவர்.

இதுகுறித்து அபிஷேக் நாயர் கூறும் பொழுது ” இதைச் செய்ய பலவீரர்கள் இருக்கிறார்கள். ஐபிஎல் 16வது சீசனில் கொல்கத்தா அணிக்காக பினிஷர் ரோலில் மிகச் சிறப்பாக செயல்பட்ட ரிங்கு சிங் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் அந்த ரோலில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அவருக்கு இன்னும் சிறிது நேரம் தேவை. அதேபோல் அவருக்கு நிறைய ஆதரவு தேவை.

- Advertisement -

ஃபினிஷர் ஆக இருப்பது மிகவும் கடினமானது. அந்தப் பொறுப்பை ஏற்கும் போது வெற்றியை விட தோல்வியே அதிகம் வரும். அதற்கு நிறைய அனுபவம் தேவை. திலக் வர்மா தற்பொழுது தனது திறமையை நிரூபித்து நான்காவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். ஃபினிஷர் இடத்துக்கு எந்த பாரபட்சமும் இல்லாமல் நான் ரிங்கு சிங் பெயரை சொல்வேன்.

இந்த இந்தியக் குழந்தை மிகச் சிறப்பாக செயல்பட்டு நான் நிறைய பார்த்திருக்கிறேன். உள்ளே சென்று தொடர்ச்சியாக பெரிய சிக்ஸர்களை அடிக்கக்கூடிய திறமை இவருக்கு இருக்கிறது. அவர் மிகப்பெரிய ஆட்டக்காரர்களில் ஒருவர் கிடையாது. ஆனால் அவரால் பினிஷர் ரோலில் சிறப்பாக செயல்பட முடியும். அதற்கு அவருக்குத் தேவை நீண்ட ஆதரவு மட்டுமே!” என்று கூறி இருக்கிறார்!