உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவாரா? ஹர்திக் பாண்டியா பதில்!

0
506
Hardikpandya

இந்திய அணி உள்நாட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 எனக் கைப்பற்றியது!

இந்த நேரத்தில் நியூசிலாந்து நாட்டுக்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட சென்ற இலங்கை அணி முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி பந்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது.

- Advertisement -

இந்தக் காரணங்களால் இந்திய அணி இரண்டாவது முறையாக தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றது. இந்தப் போட்டி ஜூன் மாதம் ஏழாம் தேதி இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்க இருக்கிறது.

வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணங்களில் முதன்மையானவர் ஜஸ்பிரித் பும்ரா. ஆனால் தற்போது அவர் முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் அறுவை சிகிச்சை செய்துள்ளதால் இந்த இறுதிப் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம்பெறுவது குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் சில முக்கிய கருத்துகளை பகிர்ந்திருந்தார்.

- Advertisement -

இது குறித்து வாட்சன் பேசியிருக்கும் பொழுது ” டெஸ்ட் கிரிக்கெட்டின் கடுமையை அவரது உடலால் கையாள முடிந்தால் மிகச் சிறப்பாக இருக்கும். அவர் தனது பேட்டிங்கில் நம்ப முடியாத திறன்களை பெற்றுள்ளார். பந்து வீச்சு என்று எடுத்துக் கொண்டால் அவர் இதற்கு உடல் தகுதியுடன் இருந்தால் புதிய பந்தில் மிகவும் சிறப்பாக ஸ்விங் செய்து வீசுவார். அவர் இந்திய அணிக்கு மிக நல்ல தாக்கத்தை கொண்டு வருவார். அவர் ஒரு வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டராக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடுவதை நான் விரும்புகிறேன். அப்படி அவர் விளையாடும் பொழுது உலகின் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு வீரராக அவர் விளங்குவார். அதற்கான தனித்திறன்களைக் கொண்டவர்” அவர் என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக தற்பொழுது மௌனம் கலைத்துள்ள ஹர்திக் பாண்டியா
” நான் இப்படியான விஷயங்களில் மிகவும் தர்மத்தின் அடிப்படையில் செயல்படக்கூடிய நபர். இந்திய டெஸ்ட் அணியைச் சென்றடைவதற்கு நான் பத்து சதவீதம் கூட எதையும் செய்யவில்லை. என்னுடைய பங்கு அங்கு ஒரு சதவீதம் கூட இல்லை. இப்படி இருக்கும் பொழுது நான் அங்கு வந்து ஒருவருடைய இடத்தை எடுப்பது என்பது தர்மம் ஆகாது. நான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்பினால் அதற்காக கடுமையாக உழைத்து செயலாற்றி பின்பு எனக்கான இடத்தை அணியில் பெறுவேன். நான் எனக்கான இடத்தை பெறுவதற்கான தகுதியை பெற்றிருக்கிறேன் என்று உணரும் வரை நான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் அதற்கு அடுத்து தொடர்ந்து வரும் இந்திய அணியின் டெஸ்ட் போட்டி அணிகளில் இடம்பெற மாட்டேன்!” என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்!