கில் விளையாடுவாரா? யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்? என்ன மாதிரியான திட்டம்? – ராகுல் டிராவிட் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

0
770
Dravid

இந்திய அணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தனது முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை அக்டோபர் எட்டாம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது.

போட்டிக்கு இன்னும் ஒரு நாள் இடையில் இருக்கும் நேரத்தில் திடீரென இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில்லுக்கு டெங்கு தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. இது கடைசி நேரத்தில் இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் காலையில் இந்த விஷயம் தொடர்பாக காலையில் தெரிவித்த இந்திய அணி நிர்வாகம், முடிவு என்னவென்று மாலை 6:00 மணிக்கு தெரிவிப்பதாக கூறியிருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகிறார். அதில் கில் உடல்நிலை குறித்தும், மேலும் அதற்கான மாற்று வீரர்கள் யாராக இருப்பார்கள்? என்பது குறித்தும் அவர் பேசியிருக்கிறார்.

ராகுல் டிராவிட் கில் குறித்து கூறும் பொழுது “அவரது உடல் நிலையில் இன்று முன்னேற்றம் இருக்கிறது. போட்டிக்கு இன்னும் நடுவில் 36 மணி நேரங்கள் இருக்கிறது. அவர் போட்டியில் இருந்து இன்னும் ரூல்டு அவுட் ஆகவில்லை. நாங்கள் நிலைமைகள் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். கில் விஷயத்தில் கடைசி நிமிடத்தில் கூட நாங்கள் முடிவெடுப்போம்!” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் சூரிய குமாருக்கான வாய்ப்பு பற்றி பேசி உள்ள ராகுல் டிராவிட் “சூரியகுமார் யாதவ் எப்பொழுதும் சிறந்த வீரர். அவர் சில விஷயங்களில் உழைத்து வருகிறார். அவர் சில விஷயங்களில் கற்றுக் கொண்டிருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் அவரது பொதுவான வழியை தவிர்த்து சில வழிகளை கண்டுபிடிக்குமாறு நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம். தற்பொழுது அவர் அதில் சிறப்பான உழைப்பை செலுத்தி கொண்டிருக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!

மேலும் சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்கின்ற காரணத்தினால், இந்திய அணி சுழற்பந்து வீச்சில் மூன்று வீரர்களைக் களம் இறக்கி விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் மூவரும் விளையாடுவார்கள்!