“பாபர் அசாம் தோல்வியை ஒத்துக்கிட்டு.. இப்பவே பாகிஸ்தானுக்கு போயிடனுமா?” – திடீரென களம் இறங்கிய கம்பீர்!

0
1020
Babar

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. அதில் ஒரு போட்டியில் ஒரு சதவீதம் அரையிறுதி வாய்ப்பை வைத்திருக்கும் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் செயல்பாடு மோசமாகத்தான் இந்த உலகக் கோப்பையில் இருந்திருக்கிறது.

- Advertisement -

இன்னொரு பக்கத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, அதன் கேப்டன், பயிற்சியாளர்கள் குழு மற்றும் கிரிக்கெட் வாரியம் என எல்லாவற்றையும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கி வருகிறார்கள்.

நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பாகிஸ்தான் முன்னாள் வீரர்களுக்கு மறைமுகமான விமர்சனம் ஒன்றை முன் வைத்தார். அதில் எந்த அறிவுரையாக இருந்தாலும் டிவியில் பேசாமல் என்னுடைய நம்பருக்கு மெசேஜ் செய்யுங்கள் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள இந்திய முன்னாள் வீரர் கம்பீர் கூறும் பொழுது “இது பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இங்கிலாந்துக்கு எதிரான வெற்றி என்பது கடினமானதுதான். ஆனால் நீங்கள் ஒரு கேப்டனிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் என்ன சொல்ல வேண்டும்? தோல்வியை ஒப்புக்கொண்டதாகவும், அவர்கள் திரும்பிச் செல்ல விரும்புவதாகவும் கூற வேண்டுமா?

- Advertisement -

அவர் தனது நாட்டின் அணியின் தலைவர். அவருக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் தனது நம்பிக்கையை வெளிப்படுத்த முழு உரிமையும் இருக்கிறது. ஒரு சதவீத வாய்ப்பு இருந்தாலும் அந்த வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் இன்னும் வெளியேறிவிடவில்லை. கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

சமூக வலைதளத்தில் நாம் என்ன பேசுகிறோம் எழுதுகிறோம் என்பது முக்கியம் கிடையாது. ஒரு தலைவரின் கடமை என்பது அது முடியும் வரை முடிவடையவில்லை என்பதுதான். ஒரு சதவீத வாய்ப்பு இருந்தாலும் போய் விளையாடத்தான் வேண்டும். நான் ஒரு ரன்கள் அடிக்க வேண்டும் என்றால் அடிக்க முயற்சி செய்யத்தான் வேண்டும்.

உண்மையில் பாகிஸ்தானுக்கு இழப்பதற்கு என்று எதுவும் கிடையாது. அவர்கள் 400 ரன்களை அடிக்கும் முயற்சியில் 250 ரண்களில் கூட ஆட்டம் இழக்கலாம். ஆனால் அவர்கள் நான் ஒரு ரன்கள் அடித்து அவர்களை 200 ரன்களில் சுருட்ட நினைக்கிறார்கள். அதை மனதில் வைத்திருக்கிறார்கள் இதுதான் முக்கியம்!” என்று கூறியிருக்கிறார்!