விக்கெட் ஸ்லோ; பந்து ஸ்விங்; எப்படி பவுலிங் பண்றதுனு மகி பாய்கிட்ட கேட்டேன் ; அவர் ஒரு ஐடியா கொடுத்தார் – தீபக் சகர்!

0
32686
Deepak

இன்று பிளே ஆப்ஸ் வாய்ப்புக்கு முக்கியமான போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது!

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சிவம் துபே 25 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய டெல்லி அணியால் 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 15 புள்ளிகளை மொத்தமாக சேர்த்து புள்ளி பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்து பிளே ஆப் சுற்றில் ஒரு காலை அழுத்தமாக பதித்தது.

சென்னை அணியின் பந்துவீச்சில் பவர் பிளே ஓவரில் சென்னை அணியின் தீபக் சகர் சிறப்பாக பந்து வீசி கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் சால்ட் இருவரது விக்கட்டுகளையும் வீழ்த்தி ஆரம்பத்திலேயே அழுத்தத்தை உண்டாக்கினார். இந்த அழுத்தம் டெல்லி அணியை மொத்தமாக புரட்டிப் போட்டது.

- Advertisement -

போட்டியில் வெற்றி பெற்ற பிறகு பேசிய தீபக் சகர் “பந்து நன்றாக ஸ்விங் ஆனது அதே சமயத்தில் விக்கெட் மெதுவாகவும் இருந்தது. நான் இதில் எப்படி பந்து வீசலாம் என்று மகிபாயிடம் கேட்டேன்.

அதற்கு அவர் ‘விக்கெட் மெதுவாக இருப்பதால் வேகமாக வீசத் தேவையில்லை. கொஞ்சம் மெதுவாக பந்தை ஸ்விங் செய்து வீசினால் போதும். பேட்டர்களுக்கு விளையாட கடினமாக இருக்கும்” என்றார்.

இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட்டில் வேகம் குறையும் என்று நினைத்தோம். மேகமூட்டமாக இருந்தது அதனால் பனிப்பொழிவு இல்லை. இதனால்தான் மகி பாய் முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தார்.

இந்த ஆடுகளத்தில் 160 ரன்கள் என்பது சவாலான ஸ்கோர் ஆகும். இங்கு நல்ல பவர் பிளே தேவை. எங்களிடம் நல்ல பவர் பிளே இருந்தது.

காயங்களுடன் எப்பொழுதும் கடினம்தான். ஒவ்வொரு முறை நீங்கள் காயமடையும் பொழுதும் பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்குகிறீர்கள். இன்னும் நூறு சதவீதம் சரியாகவில்லை ஆனால் பணிக்காக எனது பங்களிப்பை செய்ய முயற்சி செய்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!