ஐபிஎல் ஏலத்தில் பெரிய தொகைக்கு ஒப்பந்தமான மகிழ்ச்சியில் 15 ஆயிரம் ரூபாய்க்கு பீட்சா ட்ரீட் வைத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்

0
235
Nicholas Pooran Pizza Treat for 15,000

நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் தற்போது விமர்சையாக நடந்து முடிந்துள்ளது. எட்டு அணிகளுக்கு பதிலாக 10 அணிகள் பங்கேற்பதால் இந்த ஆண்டு பல புதுமுக வீரர்கள் ஐபிஎல் அணிகளுக்கு விளையாட ஒப்பந்தம் ஆகி உள்ளனர். வரும் மார்ச் மாதம் கடைசி வாரத்தில் இருந்து ஐபிஎல் தொடர் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி விளையாடி வந்தாலும் தற்போதைய ஐபிஎல் தொடரில் மீது அனைத்து ரசிகர்களும் பெருத்த எதிர்பார்ப்பை கொண்டுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் இளம் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இவர் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். ஆனால் இவர் 11 இன்னிங்ஸ்களில் 85 ரன்கள் மட்டுமே எடுத்தார். தற்போதும் இந்தியாவுக்கு எதிரான தொடரில் பெரிதாக இவர் சாதிக்கவில்லை. இருந்தாலும் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் சன்ரைசர்ஸ் அணி இவரை 10 கோடிக்கும் அதிகமான ரூபாய் செலவழித்து எடுத்துள்ளது. இவ்வளவு பெரிய தொகைக்கு விலை போன மகிழ்ச்சியில் மேற்கிந்திய தீவுகள் வீரர்களுக்கு இவர் உணவு வாங்கிக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தள்ளியிருக்கும் ஓட்டலை விட்டு வெளியேறக் கூடாது என்ற காரணத்தினால் இவரே சக வீரர்களுக்கு பீட்சா ஆர்டர் செய்து கொடுத்துள்ளார். உடலில் இருந்தால் சமையல்காரர் மூலமாக செய்யப்பட்ட இந்த பீட்சா கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளுக்கு உட்பட்டு விண்டீஸ் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உணவுகள் உட்பட அனைத்துமே கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு தான் வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு முறை பூரன் சார்ஜர் கேட்டதற்கு கூட கிருமி நாசினி தெளித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் மின்சாரத்தில் இணைத்தவுடனேயே அவருக்கு ஷாக் அடித்து உள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது டி20 போட்டி முடிந்ததுமே மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பாமல் ஒரு நாள் தங்கி இருந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

வீரர்கள் ஒரு தான் அதிகமாக தங்கியிருந்து பொருட்கள் வாங்குவது மற்றும் கோல்ஃப் விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடலாம் என்று கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தனிமையில் இருக்கும் வீரர்களுக்கு இது மிகவும் சந்தோஷமான செய்தியாக அமையும் என்று ரசிகர்கள் கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.

- Advertisement -