வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுங்கள் என்று வீரர்களிடம் பிச்சை கேட்க முடியாது – வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் வேதனை!

0
820
Phil Simmons

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்காக வெஸ்ட்இண்டீஸ் தீவுக்கூட்டங்களைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் அந்த அணிக்கு கிடைக்காத காரணத்தால் அந்த அணி சொந்த நாட்டிலேயே பல தோல்விகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது.

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் செய்து சமீபத்தில் விளையாடும் முன் பங்களாதேஷ் அணி அங்கு சுற்றுப்பயணம் செய்து இருந்தது. அந்த சுற்றுப்பயணத்தில் டி20 தொடரை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஒருநாள் தொடரின் 3 ஆட்டங்களிலும் தோற்று பங்களாதேஷ் அணியிடம் தொடரை இழந்திருந்தது. இதற்கு முன்னால் அயர்லாந்து அணியிடம் சொந்த நாட்டிலேயே தொடரை இழந்து இருந்தது.

- Advertisement -

இந்திய அணியின் தற்போதைய வெஸ்ட்இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் போட்டிகள் 5 டி20 போட்டிகள் நடைபெற்றன. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியை வென்றது ஒரே ஒரு போட்டியில் தான். டி20 தொடரில் இரண்டாவது ஆட்டத்தில் வென்றிருந்தது. வீரர்களின் ஆட்டம் படு மோசமாய் பொறுப்பில்லாமல் இருந்தது.

தற்போது டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக நியூசிலாந்து அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாட இருக்கிறது. ஆனால் இந்த தொடருக்கும் வெஸ்ட் இண்டீஸ் இன் நட்சத்திர வீரர்கள் கிடைக்கவில்லை. உதாரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஆன்ட்ரே ரசல் தற்போது இங்கிலாந்தின் 100 பந்து கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார. இவர் கடைசியாக கடந்த ஆண்டு அனைத்து அரபு எமிரேட்டில் நடந்த டி20 உலக கோப்பையில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்காக விளையாடினார். அதற்குப் பிறகு இவர் வெஸ்ட்இண்டீஸ் அணிக்காக விளையாட வில்லை. இதேபோல் சுனில் நரேன் தொடர்ந்து வெஸ்ட்இண்டீஸ் அணிக்காக டி20 போட்டிகளில் கூட பங்கேற்பதில்லை. இவர்கள் இருவருமே தற்போது இமிடேட் அரபு எமிரேட்டில் நடக்க உள்ள டி20 தொடரிலும் பங்கேற்பதாக உள்ளார்கள்.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சரித்திர வீரர்கள் விளையாடாத சூழலில், இது குறித்தும் நியூஸிலாந்து தொடர் குறித்தும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் டெஸ்மண்ட் கெயின்ஸ், மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் இருவரும் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்கள்.

- Advertisement -

அப்போது இந்த நிலை குறித்து பேசிய டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் ” எனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் ரசலும், நரைனும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிடைக்க மாட்டார்கள் என்றே தெரிகிறது. அவர்கள் தற்போது பிசியாக இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

ஆனால் இது குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் மிகவும் விரக்தியாகப் பேசினார். அதில் அவர் ” இந்த நிலை மிகவும் வலிக்கிறது. இதற்கு என்ன செய்வது நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுங்கள் என்று வீரர்களிடம் பிச்சை கேட்க முடியாது. நீங்கள் வெஸ்ட்இண்டீஸ் அணிக்காக விளையாட விரும்பினால், நிச்சயம் அதற்கு ஏற்றவாறு நீங்கள் தயாராக இருப்பீர்கள். விருப்பம் இல்லை என்றால் நீங்கள் எப்படி தயாராக இருப்பீர்கள்? வாழ்க்கை முறை மாறிக் கொண்டே வருகிறது. மக்களுக்கு பல தரப்பட்ட இடங்களில் இருந்து புதிய வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. இதில் அவர்கள் வெளியில் இருந்து வரும் வாய்ப்புகளை ஏற்றால் அதற்கு நம்மால் ஒன்றும் செய்ய முடியாது” என்று வேதனையாய் தெரிவித்தார்!