இந்திய கிரிக்கெட்

சஞ்சு சாம்சன் செய்த ரன் அவுட்.. நடுவர் அவுட் கொடுக்காதது ஏன்? – வினோதமான கிரிக்கெட் விதி

நேற்று இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் சனகாவை ரன் அவுட் செய்ததற்கு ஏன் அவுட் கொடுக்கப்படவில்லை? என்று விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இந்தப் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்ற நிலையில், இலங்கை வீரர் சனகா பந்தை தவற விட்டு ரன் ஓட முயற்சி செய்தார், அப்பொழுது விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சங் பந்தை பிடித்து ஸ்டெம்பை சரியாக அடித்தார். ஆனாலும் நடுவர் அவுட் தரவில்லை. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அர்ஸ்தீப் செய்த காரியம்

நேற்று சூப்பர் ஓவரை இந்திய தரப்பில் அர்ஸ்தீப் சிங் வீசினார். முதல் பந்தில் குசால் பெரேரா விக்கெட்டை கைப்பற்றிய அவர் இரண்டு பந்துகளில் ஒரு வைடுடன் மொத்தம் 2 ரன்கள் மட்டுமே கொடுத்தார். மேலும் அந்த ஓவரில் அவர் மூன்று பந்துகள் வீச வேண்டி இருந்தது.

அவர் அந்த ஓவரில் ஏற்கனவே வீசிய மூன்றாவது பந்தை சனகா விக்கெட் கீப்பரிடம் தவற விட்டார். மேலும் ரன் ஓட முயற்சி செய்ய சஞ்சு சாம்சன் ரன் அவுட் செய்தார். இந்த நிலையில் பௌலர் அர்ஸ்தீப் சிங் விக்கெட் கீப்பர் கேட்ச் பிடித்ததாக அவுட் அப்பீள் கேட்ட காரணத்தினால் மொத்தமும் மாறிப்போனது.

- Advertisement -

கிரிக்கெட் விதி என்ன சொல்கிறது?

அர்ஸ்தீப் அவுட் கேட்டதும் நடுவர் அவுட் கொடுத்து விட்டார். ஆனால் அதற்கு முன்பே சஞ்சு சாம்சன் ரன் அவுட் செய்துவிட்டார். இருந்தபோதிலும் நடுவர் கேட்ச் காரணத்திற்காக அவுட் கொடுத்ததும் அந்தப் பந்து அங்கேயே டெட் ஆகிவிடுகிறது. இதன் காரணமாக அதற்கு நடுவில் நடந்த எந்த விஷயங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.

இதையும் படிங்க : இலங்கை கூட பைனல் மாதிரி ஆயிடுச்சு.. அர்ஷ்தீப் கிட்ட ஒரு விஷயம் தான் சொன்னேன் – சூரியகுமார் பேச்சு

எனவே சஞ்சு சாம்சன் செய்த ரன் அவுட் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. மேலும் சனகா அப்பீலுக்கு செல்ல அது நாட் அவுட் என வந்தது. ஒருவேளை அர்ஸ்தீப் சிங் அப்பீல் செய்யாமல் இருந்திருந்தால், சஞ்சு சாம்சன் செய்த ரன் அவுட் கொடுக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by
Tags: Ind vs Sl

Recent Posts