இலங்கை கூட பைனல் மாதிரி ஆயிடுச்சு.. அர்ஷ்தீப் கிட்ட ஒரு விஷயம் தான் சொன்னேன் – சூரியகுமார் பேச்சு

0
283
Surya

நேற்று இலங்கை அணிக்கு எதிராக விளையாடிய போட்டி ஆசியக் கோப்பையில் இறுதிப் போட்டி போல இருந்ததாக இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் தெரிவித்திருக்கிறார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இலங்கை 202 ரன்கள் எடுக்க போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. இந்தியா தரப்பில் அர்ஸ்தீப் சிங் சூப்பர் ஓவர் வீசி இரண்டு ரன் மட்டுமே விட்டு தந்தார். இந்திய அணி முதல் பதிலேயே மூன்றுடன் எடுத்து வெற்றி பெற்றது.

- Advertisement -

கம்பீர் செல்லப்பிள்ளை பரிதாபம்

நேற்றைய போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் கம்பீரின் செல்லப்பிள்ளை ஹர்ஷித் ராணா நான்கு ஓவர்களுக்கு பந்துவீசி 53 ரன்கள் விட்டு தந்தார். இலங்கை அணிக்கு ஆரம்பத்திலும் மத்தியிலும் ரன்கள் வருவதற்கு மிகவும் முக்கியமான காரணமாக அமைந்துவிட்டது.

அதே சமயத்தில் அர்ஸ்தீப் சிங் முதலில் ரன்கள் தந்து இருந்தாலும் கடைசியில் அவர் சிறப்பாக பந்து வீசியதால் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக மாறியது. இருந்தாலும் இறுதி போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு இந்த போட்டி மிகவும் எச்சரிக்கை அளிப்பதாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

இறுதிப்போட்டி போல இருந்தது

இது குறித்து பேசி உள்ள சூரியகுமார் யாதவ் கூறும் பொழுது ” இது இறுதிப் போட்டி போல இருந்தது. மேலும் நாங்கள் பந்து வீசியபோது பத்து ஓவருக்கு பிறகு நிறைய ஆற்றலுடன் இருக்குமாறு எங்கள் வீரர்களிடம் சொன்னேன். வழக்கம்போல் நல்ல தொடக்கம் கிடைத்தது. அதை சஞ்சு மற்றும் திலக் அருமையாக எடுத்துச் சென்றார்கள். துவக்க இடத்தில் விளையாடி வந்த சஞ்சு பொறுப்பை ஏற்று ஐந்தாவது இடத்தில் செயல்பட்ட விதம் அருமையாக இருந்தது”

இதையும் படிங்க : இது இந்திய அணிக்கு அலாரம்.. அவர வெளிய உக்கார வெச்சு ரொம்ப தப்பு பண்றீங்க.. இர்பான் பதான் எச்சரிக்கை

“அர்ஸ்தீப் சிங்கிடம் இடம் அவருடைய சொந்த ஐடியாவை செயல்படுத்த சொன்னேன். அவர் ஏற்கனவே எங்களுக்காகவும் அவருடைய ஐபிஎல் அணிக்காகவும் இதே சூழ்நிலையில் பலமுறை சிறப்பாக செயல்பட்ட அனுபவம் கொண்டிருக்கிறார். மேலும் சில வீரர்களுக்கு கிராம்ப் ஏற்பட்டு இருக்கிறது. அவர்கள் குணமடைந்து நாளை இறுதிப்போட்டிக்கு திரும்பி வரவேண்டும். நாங்கள் இறுதி போட்டியில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -