“ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் இந்த மூன்று இந்திய வீரர்களுக்கு ஏன் மிக முக்கியமானது” ?

0
293

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடர்கள் முடிந்த நிலையில் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை மும்பையில் தொடங்க இருக்கிறது. ஆஸ்திரேலியா அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட் போட்டிகளையும் மூன்று ஒரு நாள் போட்டிகளையும் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இரண்டு அணிகளுக்கும் இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை இந்தியா வெற்றி பெற்ற நிலையில் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் நாளை மும்பையில் தொடங்குகிறது. இந்த முதல் ஒருநாள் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா விலகி உள்ள நிலையில் ஹர்திக் பாண்டியா அணித் தலைவராக இருப்பார் என பிசிசிஐ நிர்வாகம் அறிவித்திருந்தது .

- Advertisement -

2023 ஆம் ஆண்டிற்கான ஐம்பது ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் ஆஸ்திரேலியா அணியுடன் நான் ஒரு நாள் போட்டி தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. உலக கோப்பையில் உரையாட இருக்கும் இந்திய வீரர்களை தேர்வு செய்வதற்கு இந்த தொடர் முக்கியமானதாக அமையும்.

இந்தத் தொடரானது இந்திய அணியின் மூன்று வீரர்களுக்கு தங்களது உலகக்கோப்பையில் அவர்களின் இடத்தை நிர்ணயிப்பதற்கு இன்றியமையாதது. அந்த வீரர்கள் யார் என்று பார்க்கலாம்.

ரவீந்திர ஜடேஜா :
இந்திய அணியின் ஸ்டார் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக பெரும்பாலான போட்டிகளில் இருந்து விலகி இருந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் மீண்டும் அணியில் இடம் பிடித்திருக்கிறார். ஒரு நாள் மற்றும் t20 போட்டிகளுக்கு இந்திய அணியின் முதல் தேர்வு சுழல் பந்து ஆல் ரவுண்டராக இருந்தவர் இவர். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இதுவரை மூன்று ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார் ஜடேஜா. வரது இடத்திற்கு அக்சர் பட்டேல், ஷபாஷ் அஹமத் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய வீரர்கள் களம் இறக்கப்பட்டனர் . இவர்களில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் பேட்டிங் பௌலிங் என சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இதனால் தற்போது ஒரு நாள் அணிக்கு திரும்பி இருக்கும் ரவீந்திர ஜடேஜா தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி தொடர் நாயகன் விருதை வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

சூரியகுமார் யாதவ்:
உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மான சூரியகுமார் யாதவ் ஒரு நாள் போட்டியில் சற்று சொதப்பி வருகிறார் என்று கூறலாம். ஸ்ரேயாஸ் ஐயரின் காயத்தின் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் இவருக்கு ஆட வாய்ப்பு கிடைத்தது. அந்தத் தொடரிலும் தன்னை ஒரு நாள் போட்டிகளில் நிரூபிக்க தவறி இருக்கிறார் சூர்யா. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடர்களிலும் காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் விலகி இருப்பதால் சூரிய குமார் யாதவிற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

ஷர்துல் தாகூர்:
வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான ஷர்துல் தாக்கூர் இந்திய அணியில் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக களமிறங்க வாய்ப்புகள் இருக்கின்றன. இந்திய அணி தங்களுடைய பேட்டிங் வரிசையை வலுப்படுத்த நினைத்தால் இவரை ஆடும் லெவனில் எடுப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு உலகக் கோப்பை காண 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற முயற்சிப்பார்.