ஷுப்மன் கில் இருக்கும்போது சூரியகுமார் யாதவ் எப்படி பிளேயிங் லெவனில் வந்தார்? ஏன் எடுத்து வந்தேன்? – ரோகித் சர்மா பேட்டி!

0
800

சூரியகுமார் பிளேயிங் லெவனுக்குள் வருவதற்கான காரணம் என்னவென்று ரோகித் சர்மா பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நாக்பூர் மைதானத்தில் துவங்கிவிட்டது. ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இந்தியா பந்துவீசி வருகிறது.

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டியில் சூரியகுமார் யாதவ் மற்றும் கே எஸ் பரத் ஆகிய இருவரும் அறிமுகமாகியுள்ளனர். இவர்களுக்கு டெஸ்ட் தொப்பியை அணிவித்து மரியாதை செலுத்தி வரவேற்று இருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் மற்றும் லெஜெண்ட் ரவி சாஸ்திரி.

இதற்கிடையில் கே.எல் ராகுல் மற்றும் ஷுப்மன் கில் இருவரில் யார் ஓப்பனிங் இறங்குவார் என்கிற விவாதங்கள் எழுந்தது. அணி நிர்வாகத்தில் இருந்து வந்த தகவலின்படி, கே எல் ராகுல் ஓபனிங் செய்வார் என உறுதியாகிவிட்டது.

அதேநேரம் சிறந்த பார்மில் இருக்கும் ஷுப்மன் கில் நிச்சயம் வெளியில் அமர்த்தப்படமாட்டார். அவர் மிடில் ஆர்டரில் களமிறங்குவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், சூரியகுமார் யாதவ் பிளேயிங் லெவனில் இருக்கிறார் என்கிற தகவல்கள் வந்தது.

- Advertisement -

போட்டிக்கு முன்னர் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட ரோகித் சர்மா இதற்கு பதில் கொடுத்திருக்கிறார். “ஷுப்மன் கில் நல்ல பார்மில் இருக்கிறார். அதற்கு மாற்று கருத்து இல்லை. ஆனால் மிடில் ஆர்டரில் அவரை களமிறங்க வைப்பது எந்த வகையில் சரியாக இருக்கும் என்று தெரியவில்லை.

சூரியகுமார் யாதவிற்கு இது அறிமுக தொடர். ஆனால் அவர் இந்திய மண்ணில் நிறைய அனுபவங்கள் கொண்டிருக்கிறார். டி20 போட்டிகளில் அசாத்தியமான பார்மில் இருக்கிறார். அந்த பார்மை முதல் டெஸ்ட் போட்டியிலும் கொண்டு வருவார் என எதிர்பார்க்கிறேன்.” என்று கூறிவிட்டு, “தற்போது வரை ப்ளெயிங் லேவனில் யார் யார் இருப்பார் என்று கூற இயலாது.” என தெரிவித்தார்.

அதன்பிறகு போட்டிக்கு முன் டாஸ் போடும்போது பேசிய ரோகித் சர்மா, சூரியகுமார் யாதவ் பிளேயிங் லெவனில் இருக்கிறார் என தெரிவித்துவிட்டு, மைதானத்தின் கண்டிஷன் வைத்து பார்க்கையில் மெல்ல மெல்ல ஸ்பின்னர்கள் பக்கம் ஆட்டம் திரும்பும் எனத் தெரிகிறது. ஆகையால் இந்த மாற்றங்கள் செய்திருக்கிறோம் என்றும் கூறியிருக்கிறார்.

இவை அனைத்தையும் வைத்து பார்க்கையில் சூரியகுமார் யாதவ் மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு சரியாக இருக்கிறார். மேலும் ஸ்பின்னர்கள் எதிர்கொள்வதற்கு கைதேர்ந்தவர் என்கிற அடிப்படையில் எடுத்து வரப்பட்டிருக்கிறார் என தெரியவந்துள்ளது.