“சூரியகுமார் எதுக்கு? ரிங்கு சிங்குக்கு வாய்ப்பு கொடுத்து இருக்க வேண்டும்!” – பாகிஸ்தான் வீரர் பரபரப்பு பேச்சு!

0
400

இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன . இதற்கான வீரர்களின் பட்டியல் இரண்டு நாட்களுக்கு முன்பு பிசிசிஐ வெளியிட்டது .

டெஸ்ட் அணியில் சர்பராஸ் கான் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் சேர்க்கப்படாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர்களும் கிரிக்கெட் விமர்சீர்களும் தங்களது ஏமாற்றத்தை சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டு வருகின்றனர் .

- Advertisement -

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்குப் பிறகு இந்தியா ஐந்து போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது . அடுத்த வருடம் டி20 உலக கோப்பை நடைபெற இருப்பதால் அதற்கான தயாரிப்புகளிலும் தற்போது இருந்தே கவனம் செலுத்தி வருகிறது . இந்நிலையில் இந்திய டி20 அணியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய ரிங்கு சிங் இடம் பெற வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் தனது கருத்தை பகிர்ந்திருக்கிறார் .

பாகிஸ்தான் அணியின் முன்னாள் பேட்ஸ்மனும் விக்கெட் கீப்பருமான கம்ரான் அக்மல் நடைபெற இருக்கும் டி20 தொடர்களில் ரிங்கு சிங்கிற்கு நிச்சயமாக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் . இதுகுறித்து பேசி இருக்கும் அவர் ” நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக பல மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடியிருக்கிறார். அவர் நிச்சயமாக இந்தியா டி20 அணியில் இடம் பெற வேண்டும் . இந்திய தேசிய அணியில் இடம் பெறுவதற்கான எல்லா தகுதிகளும் அவருக்கு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார் .

மேலும் தொடர்ந்து பேசிய கம்ரான் அக்மல் ” சூரியகுமார் யாதவ் ஏன் ஒரு நாள் போட்டிக்கான அணியில் இடம் பெற்றிருக்கிறார் என்று தெரியவில்லை . அவருக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டது . ஆனாலும் தன்னுடைய தேர்வை உறுதி செய்யும் வகையில் அவர் எந்த போட்டியிலும் ஆடவில்லை . அப்படி இருந்தும் ஒரு நாள் போட்டிக்கான அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டு இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது . ஒருவேளை உலகக் கோப்பையில் ஆடக்கூடிய இந்திய வீரர்கள் யாரேனும் உடல் தகுதி பெறவில்லை என்றால் அவருக்கு பதிலாக இவரை தேர்ந்தெடுக்கலாம் என்பதால் சூரியகுமார் அணியில் இடம் பெற்று இருக்கலாம்” எனவும் தெரிவித்தார்,

- Advertisement -

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இந்த வருடம் ஐபிஎல் தொடரில் ஆடிய ரிங்கு சிங் 14 போட்டிகளில் விளையாடி 474 ரன்கள் எடுத்துள்ளார் இதில் நான்கு அரை சதங்கள் அடங்கும் . இவரது சராசரி 59.25 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 149.53. இந்த வருடத்தில் கொல்கத்தா அணியின் அனைத்து போட்டிகளிலும் விளையாடி அந்த அணி பல போட்டிகளை வெற்றி பெற காரணமாக இருந்திருக்கிறார் . குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 31 ரன்கள் தேவைப்பட்டபோது 5 சிக்ஸர்களை தொடர்ச்சியாக அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த வருட ஐபிஎல் சீசனை தொடர்ந்து நிச்சயமாக டி20 போட்டிகளில் ரிங்கு சிங்கிற்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவதற்கான அனைத்து தகுதிகளையும் உடைய வீரர் . இதைத்தான் கம்ரான் அக்குமால் தனது பேட்டியில் கூறியிருக்கிறார் .