நேற்று ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பேட்டிங்கில் கேப்டன் ருதுராஜ் மற்றும் ரச்சின் ரவீந்தரா இருவரும் முக்கிய காரணங்களாக இருந்து அரை சதம் அடித்தார்கள்.
இந்த போட்டியில் துவக்க ஆட்டக்காரராக வந்த ரச்சின் ரவீந்தரா இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்று பொறுப்புடன் விளையாடி சிஎஸ்கே அணியை வெற்றி பெற வைத்தார். அதே சமயத்தில் கேப்டன் ருதுரஜ் அதிரடியாக விளையாடி 26 பந்தில் 53 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கான்வே விளையாட வைக்கப்படவில்லை. காயமடைந்த ரச்சின் ரவீந்தரா திரும்பி வந்ததும் அவர் விளையாடும் அணியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது சிஎஸ்கே அணியிலும் அதுவே தொடர்ந்து இருக்கிறது.
இந்தத் தொடரில் இரண்டு சதங்கள் அடித்தது தொடர் நாயகன் விருதை பெற்றிருந்தார். அந்த பேட்டிங் ஃபார்ம் அப்படியே சிஎஸ்கே அணிக்கு மீண்டும் தொடர்கிறது. நேற்று அவர் 45 பந்துகள் சந்தித்து 65 ரன்கள் எடுத்தார். குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் இளம் சுழல் பந்துவீச்சாளர் விக்னேஷ் புத்தூர் பந்து வீச்சுக்கு அனைவரும் தடுமாறிய பொழுது ரச்சின் ரவீந்திரா மிகச் சிறப்பாக விளையாடினார். தோனி வரும் வரை களத்தில் நின்று வெற்றியை சிக்ஸர் அடித்து உறுதி செய்தார்.
நேற்று பேட்டிங் செய்ய களத்திற்கு வந்த தோனி முதல் இரண்டு பந்துகள் சந்தித்து ரன் ஏதும் எடுக்கவில்லை. அடுத்த ஓவரில் ரச்சின் ரவீந்தரா சிக்ஸர் அடித்து போட்டியை முடித்து விட்டார். தோனி மீண்டும் விளையாடுவதற்கு அவர் வாய்ப்பை வைக்கவில்லை. இதன் காரணமாக சிஎஸ்கே ரசிகர்கள் தோனி விளையாடுவதற்கு ரச்சின் ரவீந்தரா ஸ்ட்ரைக் கொடுத்திருக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வந்தார்கள்.
இதையும் படிங்க: எங்க 10 மாத உழைப்பு வீண் போகல.. நாங்க தோத்தாலும் இதை நினைச்சா பெருமையா இருக்கு – மும்பை கேப்டன் பேட்டி
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரச்சின் ரவீந்திரா கூறும் பொழுது “ஆட்டத்தை அதிக நேரம் ஊற வைத்துக் கொண்டிருக்க முடியாது. நம்மால் முடிந்தவரை சீக்கிரத்தில் போட்டியை முடிக்க பார்க்க வேண்டும். நீங்கள் போட்டியை வெல்வதில் மட்டுமே கவனம் செலுத்துகிறீர்கள். இருப்பினும் ரசிகர்களின் இந்த கருத்தை புறக்கணிக்க முடியாது. தோனி விசில் சத்தத்துடன் வெளியில் வருவதை கேட்கிறீர்கள். அவருடன் முதல்முறையாக கிரீஸ் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியாக இருந்தது. அவர் இந்த விளையாட்டின் ஒரு ஜாம்பவான். இங்குள்ள மக்கள் அவரை மிகவும் விரும்புகிறார்கள். இது தனிப்பட்ட சிறப்பான விஷயம்” என்று கூறி இருக்கிறார்.