எங்க 10 மாத உழைப்பு வீண் போகல.. நாங்க தோத்தாலும் இதை நினைச்சா பெருமையா இருக்கு – மும்பை கேப்டன் பேட்டி

0
619

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி போராடி சென்னை அணியிடம் வீழ்ந்தது.

இந்த சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து அதன் கேப்டன் சூரியகுமார் யாதவ் சில முக்கிய கருத்துகளை பேசியிருக்கிறார்.

- Advertisement -

சிஎஸ்கே வெற்றி

ஹர்திக் பாண்டியா முதல் போட்டியில் விளையாடாமல் போக அவருக்கு பதிலாக கேப்டன் சூரியகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை தாங்கினார். நேற்று நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் சென்னை அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் திலக் வர்மா 31 ரன்கள் குவித்தார். சிஎஸ்கே அணி தரப்பில் சுழல் பந்துவீச்சாளர் நூர் அகமது 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி சென்னை அணி களம் இறங்கியது. கேப்டன் ருத்ராஜின் அதிரடியான ஆட்டத்தால் எளிதில் வெற்றி பெறும் நிலையில் இருந்த சென்னை அணியை கேரளாவைச் சேர்ந்த 24 வயது வீரர் விக்னேஷ் புத்தூர் தனது சிறப்பான பந்து வீச்சால் சென்னை அணியின் வெற்றியை மிகவும் கடினம் ஆக்கினார்.ருதுராஜ் 53 ரன், சிவம் தூபே 9 ரன், தீபக் ஹூடா 3 ரன் என தனது முதல் போட்டியிலேயே 3 முக்கிய வீரர்களை வீழ்த்தி பெரிய கவனத்தை ஈர்த்தார். இதனால் எளிதாக வெற்றி பெற வேண்டிய போட்டியை சென்னை அணி இறுதியாக 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

- Advertisement -

10 மாதங்களாக செய்து வருகிறார்கள்

இந்த சூழ்நிலையில் மும்பை அணி குறித்து கேப்டன் சூரியகுமார் பேசும்போது ” நிச்சயமாக நாங்கள் 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்தோம். ஆனால் எங்கள் வீரர்கள் போராடிய விதம் மிகவும் பாராட்டத்தக்கது. மும்பை இந்தியன்ஸ் எப்போதுமே இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில் பெயர் பெற்றது. மும்பை குழு இதனை கடந்த 10 மாதங்களாக செய்து வருகிறார்கள். விக்னேஷ் புத்தூர் அதன் விளைவாக வந்தவர் தான். ஆட்டம் மோசமாகச் சென்றால் அவரை பயன்படுத்தலாம் என்று ஒரு ஓவரை பாக்கட்டில் வைத்திருந்தேன்.

இதையும் படிங்க:இந்த 3 பேர கொண்டு வரணும்னு ஏலத்துலையே முடிவு பண்ணோம்.. இப்போ பெஸ்ட் ப்ளேயரா மாறிட்டாரு – சிஎஸ்கே கேப்டன்

ஆனால் அவருக்கு 18 வது ஓவரை கொடுப்பதில் ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலை உருவானது. மேலும் சென்னை ஆடுகளத்தில் பனிப்பொழிவு அதிகமாக இல்லாத காரணத்தால் நிலைமை சிக்கலானது. சிஎஸ்கே வீரர் ருத்ராஜ் பேட்டிங் செய்த விதம் அபாரமாக இருந்தது. அவரது பேட்டிங் எங்கள் வெற்றியைப் பறித்தது” என்று சூரியகுமார் யாதவ் பேசியிருக்கிறார்.

- Advertisement -