ஒரு இன்ச் வித்தியாசத்தில் தப்பித்த டு பிளசிஸ்… ஆர்சிபிக்கு சரியான ட்விஸ்ட்! – நல்ல பால் ஏன் நோ-பால் ஆனது எப்படி?

0
436

பந்து ஒரு இன்ச் மேலே சென்றதால் விக்கெட் பறிகொடுத்த டு பிளசிஸ், மீண்டும் ஆட்டத்திற்குள் வந்துள்ளார். இது ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் லீக் போட்டி ஹைதராபாத்தில் நடக்கிறது. ஏற்கனவே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்தது ஹைதராபாத் அணி. ஆனால் ஆர்சிபி அணிக்கு இன்னும் பிளே-ஆப் வாய்ப்பு நன்றாகவே இருக்கிறது.

- Advertisement -

கடைசி இரண்டு லீக் போட்டிகளில் நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெற்றால் எளிதாக நான்காவது இடம்பிடித்து பிளே-ஆப் சுற்றுக்கு ஆர்சிபி அணி தகுதி பெறும். ஆகையால் இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது முக்கியம் என்றும் களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு கிளாஸன் சதம் விளாசினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 186 ரன்கள் குவித்தது.

இலக்கை துரத்திய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மற்றும் டு பிளசிஸ் இருவரும் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் ஓவரில் இருந்து அதிரடியாக விளையாடியது. போட்டியின் நான்காவது ஓவரில் டு பிளசிஸ் கொடுத்த கேச்சை தவறவிட்டார் கிளென் பிலிப்ஸ்.

அதன் பிறகும் நிறுத்தாமல் ஆடிவந்த டு பிளசிஸ் போட்டியின் ஒன்பதாவது ஓவரில் அடிக்க நினைத்தார். அது டீப் மீட்-விக்கெட்டில் திசையில் கேட்ச் ஆக மாறியது. மிகச் சிறந்த கேட்ச்சை பிடித்த ஹைதராபாத் வீரர் மயங்க் டாகர் ஆக்ரோசத்துடன் அதை கொண்டாடினார்.

- Advertisement -

ஆட்டம் இழந்துவிட்டோம் என்று நினைத்து வெளியேற நினைத்த டு பிளசிஸ் ஒரு வாய்ப்பை எடுத்து பார்ப்போம் என்று, இது பவுன்சர் பந்து போல தெரிகிறது என நடுவரிடம் கேட்டார். ஏற்கனவே அந்த ஓவரில் ஒரு பவுன்சர் வீசப்பட்டு விட்டதால் அப்படி கேட்டார். களநடுவரும் இருக்கலாம் என்று மூன்றாவது நடுவரிடம் கேட்டனர்.

ரிவியூவில் தோள்பட்டையை விட ஒரு இன்ச் பந்து மேலே சென்றதால் நோ-பால் என்று கொடுக்கப்பட்டது. இதனால் டு பிளசிஸ் அவுட் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது. ஆர்சிபி அணி நிம்மதி பெருமூச்சு விட்டது. அதன் பிறகும் அதிரடியாக விளையாடிய டு பிளசிஸ் அரைசதம் அடித்து ஹைதராபாத் அணிக்கு தலைவலியை கொடுத்தார். மறுபக்கம் விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆர்சிபி அணி வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டு வருகிறது.