ரோகித் சர்மா ஏன் அப்படி நடந்துகொண்டார்? – உடன் விளையாடிய ராபின் உத்தப்பா விளக்கம்!

0
229
Uthappa

ரோகித் சர்மா ராகுல் டிராவிட் கூட்டணியின் இந்திய அணி தற்பொழுது திடீரென்று தடம்புரண்டு எக்கச்சக்க விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. ஆசிய கோப்பைக்கு முன்பாக இவர்களது கூட்டணியில் பயணித்த இந்திய அணியின் பயணம் மிகவும் வெற்றிகரமாக இருந்தது.

தொடர் சுற்றுப்பயணத்தில் இருந்து ஆசிய கோப்பைக்கு இவர்கள் வரும்பொழுது, காயத்தால் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்செல் படேல் இருவரும் இடம் பெறவில்லை. அதே சமயத்தில் இவர்கள் மாற்று வேகப்பந்துவீச்சாளருக்கு போகவில்லை. ஒரு சுழற்பந்துவீச்சாளர் அதிகம் எடுத்துக் கொண்டு ஆசிய கோப்பைக்கு போனார்கள்.

- Advertisement -

ஆனால் விதி ஆவேஸ் கானுக்கு காய்ச்சல் என்ற ரூபத்தில் வந்து விளையாடியது. அவர் காயம் அடைந்து இருந்தால் அதை ஐசிசி இடம் காட்டி மாற்று வேகப்பந்து வீச்சாளரை உடனே கொண்டுவந்திருக்க முடியும் என்பதுதான் இதற்குள் இருக்கிற விஷயம் காய்ச்சல் என்பதால் உடனே முடியவில்லை. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடினால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடுவதில்லை, இவர்கள் நன்றாக விளையாடினால் பந்துவீச்சாளர்கள் சரியாக பந்து வீசுவது இல்லை. இப்படி அணியாக ஒருங்கிணைந்து செயல்பட முடியாமல் போய்க்கொண்டே இருக்கிறது என்பதுதான் உண்மை.

3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஆஸ்திரேலியா அணி இந்தியா வந்திருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி நேற்று முன்தினம் மொகாலியில் நடைபெற்றது. இந்திய அணியில் ஒட்டுமொத்த பேட்டிங் யூனிட்டும் மிகச்சிறப்பாக செயல்பட்டு 208 ரன்களை குவித்தது. ஆனால் பந்து வீச்சில் அக்ஷர் படேல் மட்டும் குறிப்பிடும்படி இருந்தார். மற்ற அனைவரும் ரன்களை வாரி வாரி வழங்கினார்கள். மேலும் பீல்டிங்கில் கேஎல் ராகுல் மற்றும் அக்சர் படேல் மிக முக்கியமான இரண்டு கேட்ச்களை தவறிவிட்டார்கள். இவை எல்லாம் சேர்ந்து மிக எளிதாக ஆஸ்திரேலிய அணியை வெல்ல வைத்துவிட்டது.

இந்த ஆட்டத்தில் ஒருகட்டத்தில் உமேஷ் யாதவின் இரண்டாவது ஸ்பெல்லில் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் மேக்ஸ்வெல் என அடுத்தடுத்து விழுந்தார்கள். இருவருமே விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்கள். அப்பொழுது இரண்டாவதாக மேக்ஸ்வெல் ஆட்டம் இழக்கும் பொழுது ரோகித் சர்மா களத்தில் வித்தியாசமான முறையில் வீரர்களிடம் நடந்துகொண்டார். அவர் கோபமாக இருக்கிறாரா இல்லை விளையாட்டாக செய்கிறாரா ஏன் அப்படி செய்கிறார் என்று பார்ப்பவர் அனைவருக்குமே குழப்பமாகத்தான் இருந்தது.

- Advertisement -

தற்பொழுது இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா விளக்கம் கூறியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது ” சில நேரங்களில் தினேஷ் கார்த்திக் மிகவும் ரிலாக்சாக மாறிவிடுவார். பேட்ஸ்மேன் அவுட் எனத் தெரிந்தால் அவர் ரிலாக்ஸாகத்தான் அவுட் கேட்பார். இதற்குத்தான் ரோகித்சர்மா விளையாட்டாக அவரை எச்சரிக்கை செய்தார். ரோகித் சர்மா இப்படி செய்தது சரியே. குறைந்தபட்சம் வேகமாக அவுட் அப்பில் செய்ய சொல்லி அவரிடம் ரோகித் சர்மா அப்படி விளையாட்டாக நடந்து கொண்டார் ” என்று கூறினார்.

உமேஷ் யாதவின் பந்துவீச்சில் மேக்ஸ்வெல் அடிக்கப் போக அது பேட்டில் மிகவும் சிறிய அளவில் எட்ஜ்ஜாக மாறியது. அதை அவுட் என்று கேட்ச் பிடித்த திணேஷ் கார்த்திக்குக்கு தெரியும். அதனால் அவர் மிகவும் ரிலாக்ஸாக அவுட் அப்பில் கேட்காது வந்தார். இதற்குத்தான் ரோகித்சர்மா அவரிடம் அப்படி நடந்து கொண்டார்!

- Advertisement -