பிசிசிஐ ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை இதுவரை அறிவிக்காதது ஏன்?.. வெளியான ஆச்சரியமான காரணம்.!

0
1142

ஆசிய கோப்பை போட்டிகள் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி பாகிஸ்தானின் முல்தான் நகரில் வைத்து துவங்க இருக்கிறது . 2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் ஸ்ரீலங்காவில் வைத்து நடைபெற இருக்கின்றன .

இந்தத் தொடரின் 4 போட்டிகள் பாகிஸ்தானிலும் ஒன்பது போட்டிகள் ஸ்ரீலங்கா விலும் வைத்து நடைபெற உள்ளது . ஆறு அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டி தொடரில் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடத்தை பெரும் அணியும் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெறும்.

- Advertisement -

2023 ஆம் ஆண்டின் ஆசிய கோப்பை போட்டிகள் 30ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் இன்னும் 15 நாட்களே மீதம் இருக்கிறது . ஆயிரம் இதுவரை பாகிஸ்தான் பங்களாதேஷ் மற்றும் நேபாளாகிய மூன்று அணிகள் தான் ஆசிய கோப்பை காண வீரர்களை அறிவித்திருக்கிறது . இந்தியா இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்னும் வீரர்களின் பட்டியலை அறிவிக்கவில்லை .

இந்திய அணி வீரர்களின் பட்டியலை அறிவிக்காததற்கு என்ன காரணம் என்று தற்போது வெளியாகி இருக்கிறது .அதன்படி கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் உடற்பகுதியை நிரூபிக்க போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது இதன் காரணமாகவே ஆசியக் கோப்பை காண இந்திய அணியை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பிசிசிஐ நிர்வாகம் மற்றும் தேர்வு குழு ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரின் உடல் தகுதி குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதன் காரணமாகவே இந்திய அணி தேர்வு செய்யப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பிடிஐ நிறுவனம் தெரிவித்திருக்கிறது .

- Advertisement -

கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு மிகவும் முக்கியமாய்ந்த வீரர்கள் மேலும் அந்த இடத்தில் நீண்ட காலமாக ஆடிவரும் அனுபவம் உடையவர்கள் . அதன் காரணமாக அவர்கள் இருவரது உடல் தகுதியும் உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளுக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சமீப காலமாக கேஎல் ராகுல் இந்திய அணியின் விக்கெட் கீப்பராகவும் பணியாற்றி வந்தார்.

தற்போது அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வந்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் இவர்கள் இருவரும் தங்களது உடல் தகுதியை நிரூபிக்க தீவிரமாக உழைத்து வருகின்றனர். இதன் காரணமாகவே இந்திய அணியின் அறிவிப்பு தாமதப் பட்டுள்ளது. மேலும் இந்த வார இறுதிக்குள் ஆசிய கோப்பையில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்படும் என அந்த செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.