“ஜடேஜாகிட்ட யாருமே ஏன் இந்த விஷயத்தை பார்க்கிறதே இல்லை.. இத பாருங்க!” – கவாஸ்கர் சுட்டிக்காட்டி பேச்சு!

0
1803
Jadeja

இந்திய அணி இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை நல்ல நிலையில் இருக்கிறது. இந்திய அணி குறித்து ரசிகர்களுக்கு மற்றும் முன்னாள் வீரர்களுக்கு நல்ல நம்பிக்கை இப்போது உருவாகி இருக்கிறது.

கடந்த வருடத்தில் இருந்து இந்திய அணியின் முக்கிய வீரர்களுக்கு ஏற்பட்ட காயத்தின் காரணமாக, இந்திய அணி எப்படியான கலவையை உருவாக்கும் என்கின்ற சந்தேகம் எல்லாருக்கும் இருந்தது.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணி மீதான நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. முக்கிய வீரர்களின் காயத்தின் காரணமாக இந்திய அணி நிர்வாகம் தொடர்ச்சியான பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட வேண்டியதாக இருந்தது.

ஆசியக் கோப்பைக்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணி நிர்வாகம் செய்த பரிசோதனை முயற்சிகள் சரி வர போகவில்லை. இதன் காரணமாக இந்திய அணி நிர்வாகத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்ததோடு, இந்திய அணி மீதான நம்பிக்கையும் குறைந்தது.

இந்த நிலையில் ஆசியக் கோப்பையில் இந்திய அணி செயல்பட்ட விதம் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆச்சரியப்படுத்தும் படியாக இருந்தது. இந்தத் தொடரில் காயத்திலிருந்து திரும்ப வந்த அனைத்து இந்திய வீரர்களும் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். மேலும் அணியில் இருந்த வீரர்களும் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள்.

- Advertisement -

தற்பொழுது இந்திய அணியில் கவலைக்குரிய விஷயமாக இந்திய அணியின் பீல்டிங் இருக்கிறது. மேலும் ரவீந்திர ஜடேஜா கடந்த 12 ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்ஸ்களில் 189 ரன்கள் மட்டுமே எடுத்து, கொஞ்சம் பேட்டிங் ஃபார்மில் பின்தங்கி இருப்பதும் கவலைக்குரியதாக இருக்கிறது.

தற்பொழுது இதுகுறித்து பேசி உள்ள சுனில் கவாஸ்கர் “உண்மையில் இல்லை அவருக்கு இருக்கும் அனுபவத்தில் நாம் இதுகுறித்து கவலைப்பட வேண்டிய தேவையே கிடையாது. விக்கட்டுக்கு இடையில் அவர் மிகவும் வேகமாக ஓடுவார் என்பதுதான் முக்கியமானது.

பெரும்பாலும் நாம் இந்த விஷயத்தை ரவீந்திர ஜடேஜாவிடம் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டு விடுகிறோம். அவர் பேட்டிங்கில் சிங்கிள் மற்றும் இரண்டு ரன்கள் எடுப்பதற்கு மிகவும் சிறப்பான முறையில் பங்களிப்பு செய்கிறார்.

நான் இப்படியான சிறிய விஷயங்கள்தான் மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறேன். எனவே நான் ரவீந்திர ஜடேஜாவை பற்றி கவலைப்படவில்லை. அவர் ஒரு சிறந்த அற்புதமான வீரர். ஒருமுறை ஷேன் வாட்சன் கூறியது போல அவர் ஒரு ராக் ஸ்டார்!” என்று கூறி இருக்கிறார்!