“ரோகித் டாஸ் போடறப்ப நாணயத்தை ஏன் தூரமா வீசறார்?.. இது சதி!” – பாகிஸ்தான் முன்னாள் வீரர் வித்தியாசமான குற்றச்சாட்டு!

0
2002
Rohit

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரையில் 10 போட்டிகளை தொடர்ச்சியாக வென்று, இந்திய உலகக்கோப்பை வரலாற்றில் தனிச்சாதனை படைத்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.

இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாடு ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டின் எல்லா துறைகளிலும் களத்திற்கு வெளியேயும் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது.

- Advertisement -

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் போட்டிக்காக களத்திற்கு வெளியே வகுக்கப்படும் திட்டங்கள் மிக அற்புதமாக பலனளித்து வருகின்றன. மேலும் வீரர்களுக்கு தேவையான நேரத்தில் இடை இடையில் சரியான செய்திகளும் அனுப்பப்படுகின்றன.

அதேபோல களத்திற்கு உள்ளேயும் கேப்டன் மிகச்சிறந்த முடிவுகளை எடுக்கிறார். மேலும் எடுக்கப்படும் முடிவுகளுக்கு தானே முன் நின்று விளையாடிக் காட்டி ஒட்டுமொத்த அணியும் சிறப்பாக வழி நடத்துகிறார்.

இந்திய அணியினரின் செயல்பாடுகள் என்று வரும்பொழுது கிரிக்கெட்டின் மூன்று துறைகளிலும் இந்திய அணி வீரர்கள் மிகச் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

- Advertisement -

ஏதாவது ஒரு துறை ஒரு நாளில் மிக மோசமாக செயல்பட்டது என்று கூறும் அளவுக்கு இந்த பத்து போட்டிகளிலும் எதுவும் நடைபெறவில்லை என்பது மிகவும் முக்கியமானது.

இப்படி இந்திய அணி மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி மற்ற எல்லா அணிகளையும் அதிரடியான முறையில் வெற்றி பெற்று வருவதை, வெளியில் இருக்கும் சிலரால் ஏற்றுக் கொள்ளவே முடிவதில்லை. இதனால் விசித்திரமான புகார்களை எல்லாம் இந்திய அணியின் நிர்வாகத்தின் மீது கூறி வருகிறார்கள்.

ஏற்கனவே பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஹசன் ராஸா இந்திய அணி பந்துவீச்சாளர்களுக்கு சிறப்பு பந்து தரப்படுவதாக வினோதமான குற்றச்சாட்டை ஒன்றைக் கூறியிருந்தார். இந்த நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சிக்கந்தர் பக்த் இதைவிட வினோதமான ஒரு குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.

அவர் கூறும் பொழுது “நான் உங்களுக்கு ஒரு சதி திட்டத்தை பற்றி சொல்லலாமா? டாஸ் போடும்பொழுது நாணயத்தை ரோகித் சர்மா மிக தூரமாக வீசுகிறார். இதனால் எதிரணியின் கேப்டன் சென்று நாணயம் என்ன பக்கத்தில் விழுந்து இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்ய முடியாது!” என்று மிகவும் வினோதமான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்!