“தமிழ்நாட்டு பிளேயர் ஷாருக்கான ஏன் இவங்க வாங்கல.. சத்தியமா புரியல!” இந்திய முன்னாள் வீரர் பேச்சு!

0
683
Sharuh

துபாயில் நேற்று நடந்த முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் என இரண்டு அணிகளும் மிகச் சிறப்பான அணுகுமுறையை கையாண்டு, சிறப்பான வீரர்களை பெற்று வலிமையான அணிகளாக மாறியிருக்கின்றன.

இந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என இரண்டு அணிகளும் பெரிய பணத்தைக் கொண்டு ஏலத்திற்கு வந்தன. இந்த இரு அணிகளுமே ஓரளவுக்கு தங்கள் வேலையை செய்ததாக தெரிகிறது. இதில் குஜராத் சிறப்பான வேலையை செய்திருக்கிறது. குஜராத் நேற்று 7.40 கோடிக்கு தமிழக வீரர் ஷாருக்கானை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதே சமயத்தில் இன்னொரு பக்கத்தில் டெல்லி மற்றும் கொல்கத்தா என இரண்டு அணிகளும் ஓரளவுக்கு சரியான முறையில் ஏலத்தில் சென்று இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக பெங்களூர் அணிதான் ஏலத்தில் பின்தங்கியதாக பலரும் கருதுகிறார்கள்.

இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “டெல்லி ஏலத்தில் ஒரு அளவுக்கு டீசண்டான வேலையை செய்திருக்கிறது என்று நினைக்கிறேன். அவர்கள் ஷாருக்கான் வாங்க முயற்சி செய்யாததுதான் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் தென் ஆப்பிரிக்காவின் ஸ்டப்ஸை வாங்கியதோடு, இரண்டு அன்கேப்டு இந்திய வீரர்களுக்கும் சென்றார்கள். அவர்கள் பேட்டிங்கில் நடுவரிசையில் ஒரு சிறிய ஓட்டை காணப்படுகிறது. எல்லா அணிகளிலும் ஏதாவது ஒரு குறை இருக்கும்.

மேலும் டெல்லி ஆஸ்திரேலியா வீரர்களான ஸ்பென்சர் ஜான்சனையும், ஜய் ரிச்சர்ட்சனையும் வாங்கியது. இதற்குப் பின்னால் ஆஸ்திரேலிய வீரரான டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இருப்பார்.

- Advertisement -

குஜராத் ஏலத்தில் தனது முதல் விருப்பங்களை பெற முடியவில்லை. ஆனால் அவர்கள் ஜெரால்ட் கோட்சியை ஏன் ஏலத்தில் வாங்க முயற்சி செய்யவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அந்த வீரரை மும்பை திருடிவிட்டது. வெறும் 5 கோடிக்கு மும்பை கோட்சியை வாங்கியது. மேலும் மதுசங்காவை நான்கு கோடிக்கு வாங்கியது. மொத்தமாக 10 கோடியில் வேலையை முடித்து விட்டது. ஆனால் நாங்கள் இந்த இரு வீரர்களுமே தனித்தனியாக 10 கோடிக்கு போகலாம்!” என்று நினைத்தோம் என்று கூறியிருக்கிறார்!