“கண்ணாடி மாதிரி உடையற இந்த தமிழக வீரரை ஏன் எடுத்திங்க?” – ஆகாஷ் சோப்ரா அட்டாக்!

0
1303
Aakash

இந்திய அணி தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை முடித்துக் கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறது.

இதற்கு அடுத்து இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த டி20 போட்டி தொடர் ஆகஸ்ட் 3ஆம் தேதி ஆரம்பித்து ஆகஸ்ட் 13ஆம் தேதி முடிகிறது.

- Advertisement -

இதற்கடுத்து இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்கிறது. இந்தத் தொடர் ஆகஸ்ட் 18ஆம் தேதி ஆரம்பித்து 23ஆம் தேதி முடிகிறது.

இந்தத் தொடருக்கு காயத்திலிருந்து திரும்பி வந்திருக்கும் ஜஸ்ட்பிரித் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். ருதுராஜ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். ரிங்கு சிங் இந்திய அணியில் முதல் முறையாக வாய்ப்பு பெற்று இருக்கிறார். மேலும் காயத்தில் இருந்த பிரசித் கிருஷ்ணா மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட சிவம் துபே ஆகியோர் மீண்டும் இந்திய அணிக்குள் திரும்பி வந்திருக்கிறார்கள்.

அயர்லாந்து டி20 தொடருக்கான இந்திய அணி:
பும்ரா (கே), ருதுராஜ் (து. கே) யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான்.

- Advertisement -

தற்போது இந்த அணி தேர்வு குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா “இந்த அணியில் வாஷிங்டன் சுந்தர் பெயர் இடம் பெற்று இருக்கிறது. அவர் உண்மையில் உடைய கூடியவர். அவர் அடிக்கடி காயம் அடைகிறார். சில காலத்திற்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட் நன்றாக விளையாடினார். பின்பு ஒருநாள் கிரிக்கெட் இந்தியா அணிக்குள் வந்தார். பின்னர் அவர் அடிக்கடி காயமடைந்தார். எனவே இப்பொழுது அவர் ஹேண்டில் வித் கேர் என்ற ஸ்டிக்கர் உடன் அயர்லாந்துக்கு அனுப்பப்படுகிறார்.

இவருடன் ஷாபாஷ் அகமத் மற்றும் ரவி பிஷ்னோய் இருக்கிறார்கள். எனவே எங்களிடம் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் வருகிறார்கள். பிறகு பிரசித் கிருஷ்ணா உள்ளே வருகிறார். அர்ஸ்தீப் சிங், முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான் இருக்கிறார்கள். இந்த தேர்வுகள் என் இதயத்தை சூடேற்றுகிறது.

ருதுராஜ் ஆசிய விளையாட்டுப் போட்டி இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கிறார். ஆனால் இங்கே அவர் துணை கேப்டனாக இருக்கிறார். எனவே அவரை மீண்டும் மீண்டும் நாம் தலைமை பாத்திரத்தில் பார்க்கிறோம். ஆனால் அவரை நாம் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் பயன்படுத்தி விளையாடி பார்க்கவே இல்லை. அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு தரப்படவில்லை.

ஜெய்ஸ்வால் டி20 போட்டிகளுக்கு தயாராகி வருகிறார். அவர் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 இந்திய அணியிலும் இருக்கிறார். அடுத்த டி20 அணியிலும் இருக்கிறார். மேலும் திலக் வர்மாவும் வந்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக இந்த தேர்வுகள் சரியாக இருக்கிறது!” என்று கூறி இருக்கிறார்!