“தமிழக வீரர் சாய் சுதர்சன ஏன் செலக்ட் பண்ணீங்க?.. இவர்தான் இருந்திருக்கனும்?” – இந்திய முன்னாள் வீரர் பரபரப்பு பேச்சு!

0
3347
Sai

இந்திய அணி இந்த மாதத்தில் தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்கள், மேலும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்கிறது.

நேற்று இந்த மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களுக்குமான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் மூன்று அணிகளிலும் பல வியப்பான தேர்வுகள் நடைபெற்று இருக்கிறது.

- Advertisement -

டெஸ்ட் அணியை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் ரகானே அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். அதே சமயத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் உள்ளே வர, ருதுராஜுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

டி20 அணியை எடுத்துக் கொண்டால் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்த்துக் கொள்ளப்பட்டு இருக்கிறார். அதே சமயத்தில் சிவம் துபே வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

அறிவிக்கப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்திய அணியில் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் இந்திய அணிகளில் வாய்ப்பு பெற்ற ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. அவருக்கு பதிலாக அவருடைய இடத்தில் தமிழக வீரர் சாய் சுதர்சன் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். தற்பொழுது இது சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாக மாறி வருகிறது.

- Advertisement -

இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “விளையாடியே ஆகவேண்டும் என்பதற்காக தேர்வுக்குழு ஒரு அணியை உருவாக்குகிறது என்று நினைக்கிறேன். ஒருநாள் கிரிக்கெட் அணி என்னுடைய புரிதலுக்கு மிகவும் அப்பாற்பட்டதாக இருக்கிறது. அதிக ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறப் போவதில்லை. பிறகு ஏன் இதற்காக மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டும்?

அறிவிக்கப்பட்ட இந்த அணி சரியான அணி கிடையாது. ருதுராஜ் உள்ளே இருக்கிறார். ஆனால் ஜெய்ஸ்வாலுக்கு இடம் கிடையாது. அவர் டி20 மற்றும் டெஸ்ட் அணியில் இருக்கிறார். இந்த இரண்டு வடிவத்திலும் அவரால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும் என்றால், ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் முடியாதா? இது எப்படி புரிந்து கொள்ளப்படுகிறது என்று எனக்குத் தெரியவில்லை.

சாய் சுதர்ஷன், சஞ்சு சாம்சன், ரஜத் பட்டிதார் இந்த அணியில் இருக்கிறார்கள். பேட்டிங் அவ்வளவு சுவாரசியமாக இல்லை. மேலும் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் இந்திய அணிகளுக்கு தீபக் சகர் வந்திருக்கிறார். பேட்டிங் வரிசையை நீளப்படுத்துவதற்காக இவரை கொண்டு வந்திருக்கிறார்கள் அவ்வளவுதான்!” என்று கூறியிருக்கிறார்!