“விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை பற்றி பேசிய அளவுக்கு நாம் இந்த வீரரை மறந்தது ஏன்”- இந்திய அணியின் மூத்த வீரரை பாராட்டிய அஸ்வின்!

0
780

ஐம்பது ஓவர்களுக்கான உலகக் கோப்பை போட்டிகள் வருகின்ற அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்க இருக்கிறது. அந்தப் போட்டிகளுக்காக இந்திய அணி இப்போதே தயாராகி வருகிறது . உலகக்கோப்பை பங்கேற்க போகும் 15 வீரர்களை கொண்ட அணியை தேர்ந்தெடுப்பதற்காக 20 வீரர்களை தேர்வு செய்து அவர்களை சுழற்சி முறையில் பயன்படுத்த திட்டமிட்டு இருக்கிறது இந்தியா .

கடந்த வருடத்தில் டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்ததால் அதிகமான அளவு டி20 போட்டியில் கவனம் செலுத்தி வந்தது இந்திய அணி . இதனை கருத்தில் கொண்டு அணியின் மூத்த வீரர்களுக்கும் ஒரு நாள் போட்டிகளில் இருந்து அதிகமாக ஓய்வு வழங்கப்பட்டு அவர்கள் பெரும்பாலான டி20 போட்டிகளில் ஆட வைக்கப்பட்டனர் . கடந்த வருடம் முழுவதும் இந்திய அணி பெரும் 24 ஒரு நாள் போட்டிகளில் தான் ஆடி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு டி20 உலக கோப்பையை மனதில் வைத்து ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு வழங்கப்பட்டிருந்ததால் அணியின் மூத்த வீரரான ஷிகர் தவான் சென்ற வருடம் அதிகமான ஒரு நாள் போட்டிகளில் ஆடினார் . கடந்த மூன்று ஒரு நாள் போட்டி தொடர்களில் சிறப்பாக செயல்படாத காரணத்தினால் இவர் உலக கோப்பை காண இருபது பேர் கொண்ட அணியிலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

கடந்த ஆண்டு மட்டும் 22 போட்டிகளில் ஆடி உள்ள தவான் 688 ரன்கள் எடுத்திருக்கிறார் இவரது சராசரி 34 . ஒரு சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இனி அவர் இந்திய அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ள நிலையில் இந்தியா அணியின் ஆல் ரவுண்டர் அஸ்வின் தன்னுடைய யூடியூப் சேனலில் தவானை பாராட்டி பேசி இருக்கிறார் .

இது தொடர்பாக பேசி உள்ள அஸ்வின் ” கடந்த 10 ஆண்டுகளாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு அடுத்தபடியாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஷிகர் தவான் இந்திய அணிக்காக அருமையாக ஆடி உள்ள ஒரு வீரர் . ஒரு நாள் போட்டிகளில் தவான் மற்றும் ரோகித் சர்மாவின் பார்ட்னர்ஷிப் மிகவும் வெற்றிகரமான ஒன்று என்று தெரிவித்திருக்கிறார் .

- Advertisement -

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய அவர் ” “இந்திய அணியைப் பொறுத்தவரை தவான் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய மூன்று பேரும் குறைவான இலக்கங்களில் ஆட்டமிழக்கும் சமயத்தில் தான் இந்திய அணிக்கு சிக்கல்கள் இருந்தது . விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரை பற்றி நாம் நிறைய பேசி இருக்கிறோம் . இவர்களைப் போன்றே தனது வேலையை சத்தமே இல்லாமல் செய்து முடித்தவர் தவான்”என்று பாராட்டினார் .

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “தவான் விட்டு சென்ற இடம் வெற்றிடமாக இருக்கும் என்று கூற முடியாது . ஏனென்றால் அந்த இடத்துக்காக போட்டியிடும் இஷான் கிஷான் மற்றும் கில் ஆகியோர் சமீப காலப் போட்டிகளில் அற்புதமாக ஆடி வருகின்றனர் . அதிலும் குறிப்பாக கில் ஒரு நாள் போட்டிகளில் கடந்த ஓராண்டாகவே மிகச் சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என பாராட்டியிருக்கிறார் .