ஐபிஎல் தொடரின் இன்று நாற்பதாவது போட்டியில் ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் விராட் கோலியின் பேட்டிங் மிகவும் மந்தமாக இருந்தது விமர்சனம் ஆகி வருகிறது.
இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளிசிஸ் முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தார். பெங்களூரு அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இந்த போட்டியில் அதிரடியாகவே ஆரம்பித்தார்கள். ஸ்கோர் எதிர்பார்த்த அளவுக்கு சென்றது.
இந்த நிலையில் நான்காவது ஓவருக்கு வந்த தமிழக வீரர் நடராஜன் பெங்களூரு கேப்டன் பாப் டு பிளிசிஸ் 12 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேற்றினார். இதற்கு அடுத்து வந்த வில் ஜேக்ஸ் 9 பந்தில் 6 ரன்கள் எடுத்த நிலையில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
பெங்களூர் அணி பவர் பிளேவில் முதல் ஆறு ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்தது. விராட் கோலி துவக்க ஆட்டக்காரராக வந்து போட்டியின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து மிகச் சிறப்பாக ஆரம்பித்தார். மேலும் பவர் பிளேவில் அவருடைய பேட்டிங் அதிரடியாகவே இருந்தது.
இந்த நிலையில் பெங்களூர் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்த காரணத்தினால், விராட் கோலி அடுத்து வந்த ரஜத் பட்டிதாரை அடிக்க விட்டு ஆங்கர் ரோல் செய்ய ஆரம்பித்து விட்டார். இந்த நிலையில் பொறுப்பாக விளையாடிய விராட் கோலி 37 பந்துகளில் அரை சதமும் அடித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு விளையாட முடியாததால் அரை சதத்தை விராட் கோலி கொண்டாடவில்லை.
இதையும் படிங்க : டி20 உலக கோப்பைக்கு இந்திய கேப்டனாக ரோகித் சர்மா இருக்கக் கூடாது.. இவர்தான் சரியானவர் – கேகேஆர் முன்னாள் டைரக்டர் பேட்டி
இதற்கு அடுத்து தொடர்ந்து விளையாடிய விராட் கோலியால் அதிரடியாக விளையாட முயற்சி செய்த பொழுதும் கூட பந்து நல்ல முறையில் கனெக்ட் ஆகவில்லை. போராடி பார்த்த விராட் கோலி 43 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உடன் 118 ஸ்ட்ரைக் ரேட் உடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மேலும் விராட் கோலி பவர் பிளே முடிந்து பவுண்டரி எதுவுமே அடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று அவர் விளையாடிய விதம் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, அவருக்குமே உடன்பாடாக இல்லை. அவர் களத்தில் மிகவும் விரக்தி ஆகவே காணப்பட்டார். இன்று பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்திருக்கிறது.