“140 கிலோ வீரர் ஆடும்போது உன்னால ஏன்பா விளையாட முடியல?” – இந்திய வீரரை விமர்சித்த கபில் தேவ்!

0
5251

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் இல் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளை கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது . டெஸ்ட் போட்டிகளை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் தற்போது ஒரு நாள் போட்டிகள் நடைபெற்று வருகின்றன .

இரண்டு அணிகளுக்கும் இடையே பிரிட்ஜ் டவுனில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியை இந்திய அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தத் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருக்கிறது . இன்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இரவு 7 மணிக்கு நடைபெற இருக்கிறது .

- Advertisement -

நீண்ட காலமாகவே இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் ஒரு பிரச்சினையாக இருந்திருக்கிறது . இந்தியா அணிக்கு முதல் முதலாக உலக கோப்பையை வென்று தந்த உலகின் தலைசிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவரான கபில்தேவிற்கு பிறகு இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஒரு கனவாகவே இருந்து வந்தது. அவ்வப்போது இந்த இடத்திற்கு ஒரு சில வீரர்கள் வந்தாலும் அவர்களால் நிரந்தரமாக அந்த இடத்தை நிரப்ப முடியவில்லை

கபில் தேவிற்கு பிறகு இந்திய அணியின் தலைசிறந்த ஆள்ரவுண்டராக இர்பான் பதான் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தனது கிரிக்கெட் கேரியரின் ஆரம்ப காலகட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட இர்ஃபான் பதான் நாட்கள் செல்லச் செல்ல பந்து வீக்கில் பார்மை இழந்ததோடு உடற் தொகுதி பிரச்சனைகளும் காயங்களும் அவரை அணியிலிருந்து வெளியேற்றியது . அதன்பிறகு 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு வந்த ஹர்திக் பாண்டியா வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கனவை நிறைவேற்றினார். இவர் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் சிறந்து விளங்கியதோடு டெஸ்ட் போட்டிகளிலும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு நம்பிக்கையை அளித்தார் .

2018 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியின் போது இவருக்கு முதுகில் ஏற்பட்ட காயம் நீண்ட நாட்களாக இவரை கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருக்க வைத்தது. அந்த காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்தது முதல் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார் ஹர்திக் பாண்டியா. இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஹர்திக் பாண்டியாவின் உடல்வாகு டெஸ்ட் போட்டிகளுக்கு சரிவராது . அவர் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகள் விளையாடுவது தான் சரியாக இருக்கும் என தெரிவித்திருந்தார் .

- Advertisement -

அப்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் இந்தியாவின் சாதனை கிரிக்கெட் வீரருமான கபில் தேவ் இந்தக் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு தனது கருத்துக்களையும் சுட்டிக்காட்டி இருக்கிறார் . இது குறித்து பேசி இருக்கும் கபில் தேவ்” நான் ரவி சாஸ்திரியின் கருத்துக்களை மதிக்கிறேன் அதே நேரத்தில் ஹர்திக் பாண்டியா கடினமாக உழைத்தால் அவரால் டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட முடியும் என தெரிவித்திருக்கிறார். இதற்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரரான ரஹீம் காரன்வெல் எடுத்துக்காட்டாக கூறியிருக்கும் கபில் தேவ் 140 கிலோ எடை உடைய வீரர் டெஸ்ட் போட்டிகளில் விளையாட கஷ்டப்படுகிறார் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஆனால் அவர் நினைத்தால் டெஸ்ட் போட்டிகளில் கடினமான உழைப்பை கொடுத்து சிறப்பாக செயல்பட முடியும் .

மனித உடலுக்கு எந்த வகையான காயத்திலிருந்தும் மீண்டு வரக் கூடிய சக்தி இருக்கிறது ஹர்திக் பாண்டியா இன்னும் கடினமாக உழைத்தால் நிச்சயமாக அவரால் டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் விளையாட முடியும். கிரிக்கெட் வீரர்களிலேயே அதிக காயம் அடைந்த டென்னிஸ் லில்லி மீண்டு வந்து கிரிக்கெட் விளையாடவில்லையா? என கேள்வி எழுப்பி இருக்கிறார் கபில் தேவ். எனவே ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விருப்பப்பட்டு அவர் கடினமாக உழைத்தால் நிச்சயமாக அவரால் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற முடியும் என தெரிவித்திருக்கிறார்.