“ஏன் முடியாது?.. நாங்க செமி பைனலுக்கு வருவோம்.. வேலை செஞ்சிட்டு இருக்கோம்!” – பாகிஸ்தான் வீரர் அதிரடி கருத்து!

0
1131
Pakistan

இந்தியாவில் நடைபெற்று வரும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு நான்கு அணிகளில், இந்தியா தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளின் இடங்கள் உறுதியாகி உள்ளது.

நான்காவது அணியாக நியூசிலாந்து அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது என்று கூறலாம். ஆனாலும் கூட ஒரு சதவீத அடிப்படையில் பாகிஸ்தான் அணிக்கும் அரையிறுதிக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

இதன் காரணத்தால் இன்னும் நியூசிலாந்து அணி அதிகாரப்பூர்வமாக அரை இறுதிக்கு முன்னேறவில்லை. இதன் காரணமாகவே நியூசிலாந்தை தகுதி பெற்றதாக இன்னும் உலக கோப்பையில் அறிவிக்கப்படாமல் இருக்கிறது.

அதே சமயத்தில் பாகிஸ்தான் அணி தன்னுடைய கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டி இருக்கிறது.

பாகிஸ்தான் அணி 300 ரன்கள் எடுக்கும் பொழுது இங்கிலாந்து அணியை 13 ரன்கள் சுருட்ட வேண்டும். ஆனால் இது நடக்காது. அதே சமயத்தில் 450 ரன்கள் அடித்தால் 160 ரன்களில் இங்கிலாந்து அணியை சுருட்ட வேண்டும். இதற்கான ஒரு வாய்ப்புதான் பாகிஸ்தான் அணிக்கு தற்பொழுது இருக்கிறது.

- Advertisement -

இதில் இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தால், பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதிக்கு வருவதற்கான ரன் ரேட்டை பெறவே முடியாது. எனவே இங்கிலாந்து டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்யும் முடிவை எடுத்தாலே, பாகிஸ்தான் நடப்பு உலக கோப்பையின் அரை இறுதியில் இருந்து வெளியேறிவிடும்.

இந்த நிலையில் அந்த அணியின் சுழற் பந்துவீச்சாளர் உசாமா மிர் இதுகுறித்து பேசும்பொழுது ” நாங்கள் அரை இறுதிக்கு வருவோம் என்று நம்புகிறோம். எங்களுடைய கடைசிப் போட்டி எவ்வளவு முக்கியம் ஆனது என்று எங்களுடைய ஒவ்வொரு வீரர்களும் மிக நன்றாக உணர்ந்து இருக்கிறார்கள். அவர்கள் அனைத்தையும் கொடுக்க ஆர்வமாக இருக்கிறார்கள். எங்களிடையே இருக்கும் நட்புறவு மிகவும் வலுவானது.

நாங்கள் அனைவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்கிறோம். நானும் என்னுடைய பந்துவீச்சில் கவனம் செலுத்தி திறனை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறேன். எங்களுக்கு இங்கிலாந்துக்கு எதிரான போட்டி முக்கியமானது. கடைசி போட்டியில் நாங்கள் பெற்ற வெற்றி எங்களுடைய நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!