சிஎஸ்கே அணியில் ஏன் தமிழக வீரர்கள் இல்லை? – சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் பரபரப்பு காரணம்!

0
7443
csk

ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்ற அணியாக ஐந்து முறை கோப்பையை வென்று மும்பை இந்தியன்ஸ் அணி இருந்தது. இந்தச் சாதனையை நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமன் செய்தது.

நடப்பு ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனியின் காயம், ஜடேஜாவை ரசிகர்கள் அவுட் ஆகச் சொல்லி கேட்டது, சென்னை அணியில் தமிழக வீரர்கள் இடம்பெறாதது ஆகியவை முக்கிய கேள்விகளாக இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓவாக இருக்கும் காசி விஸ்வநாதன் இந்த எல்லா கேள்விகளுக்கும் வெளிப்படையாகப் பதில் அளித்து பேசி இருக்கிறார்.

காசி விஸ்வநாதன் இது பற்றி கூறும் பொழுது “மகேந்திர சிங் தோனி முட்டி வலியுடன்தான் இந்தத் தொடர் முழுவதும் விளையாடினார். இப்பொழுது அறுவை சிகிச்சை செய்து நன்றாக இருக்கிறார். நாங்கள் யாரும் எப்பொழுதும் அவர் விளையாடுவாரா? என்று போய் அவரிடம் கேட்க மாட்டோம். விளையாட முடிந்தால் நிச்சயம் அவர் விளையாடுவார் என்று எங்களுக்குத் தெரியும். அவர் விளையாடவில்லை என்றாலும் அணி உடன்தான் எப்பொழுதும் இருப்பார்.

இறுதிப்போட்டியில் எல்லா வீரர்களும் மிகச்சிறப்பான பங்களிப்பை அளித்து கோப்பையை வெல்ல உதவினார்கள். டீம் எபெர்ட் என்று சொல்வது என்றால் அது இதைத்தான். வீரர்கள் பலருக்குக் காயம் இருந்தாலும் மகேந்திர சிங் தோனியால் மட்டுமே இந்த அணியைச் கூட்டிச் சென்று இதைச் செய்ய முடியும்.

- Advertisement -

மகேந்திர சிங் தோனியின் மேல் இருக்கும் அன்பால் ரசிகர்கள் சிலர் ஜடேஜாவை ஆட்டம் இழக்க சொல்லி பதாகை பிடித்திருந்தார்கள். ஆனால் இறுதிப்போட்டியில் கிடைத்த வெற்றியை ஜடேஜா மகேந்திர சிங் தோனிக்கு அர்பணிப்பதாக சொல்வதில் இருந்தே அணியில் சுமுகமான நிலை இருப்பது புரியும். ஜடேஜா மகேந்திர சிங் தோனியின் மீது அளவு கடந்த மரியாதை வைத்திருக்கிறார்.

நமது அணியில் நம் தமிழக வீரர்களை எடுக்க முடியாததற்குக் காரணம் ஐபிஎல் ஏலமுறையில் நடைபெறுகிறது. நாம் அணியின் ஒவ்வொரு இடத்திற்கான வீரருக்கும் ஒவ்வொரு தொகையை நிர்ணயித்து வைத்திருப்போம். அந்தத் தொகையைத் தாண்டி நம் தமிழக வீரர்கள் ஏலத்திற்கு போகும் பொழுது, அவர்களை நம்மால் வாங்க முடிவதில்லை. மேலும் இந்த வருடம் மட்டும்தான் நம்மால் தமிழக வீரர்களை வாங்க முடியவில்லை. மற்ற எல்லா வருடமும் நம் அணியில் தமிழக வீரர்கள் இருந்தார்கள்!” என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்!