பரிசளிப்பு விழாவுக்கு ஆண்டர்சன் டெண்டுல்கர் வராதது ஏன்.. பின்னணி காரணம் என்ன?.. மௌனம் காக்கும் இங்கிலாந்து

0
243
Sachin

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பரிசளிப்பு விழாவுக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இருவரும் வராதது தற்பொழுது சர்ச்சையாக மாறியிருக்கிறது.

நேற்று ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்று தொடரை இரண்டு என சமன் செய்தது. மேலும் கடந்த முறை இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்ற காரணத்தினால் இந்திய அணி வசமே கோப்பை சென்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பெயர் மாறிய டிராபி

இந்த வருடம் முதல் முறையாக இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு ஆண்டர்சன் டெண்டுல்கர் டிராபி என புதிய பெயர் வைக்கப்பட்டது. மேலும் இந்த டிராபி அறிமுகத்தின்போது ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இருவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இதே போல தொடர் நிறைவடையும் நாளில் பரிசளிப்பு விழாவில் இரண்டு லெஜன்ட் வீரர்களும் கலந்து கொள்வார்கள் என பரவலாக எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இருவரில் ஒருவர் கூட பரிசளிப்பு நிகழ்வின் போது கலந்து கொள்ளவில்லை. இரண்டு அணிகளில் கேப்டன்களும் டிராபி உடன் தனியாக போஸ் கொடுத்து கலைந்து சென்றார்கள்.

- Advertisement -

மௌனம் காக்கும் இங்கிலாந்து

தற்பொழுது இது பலவிதமான யூகங்களுக்கு வழி வகுத்திருக்கிறது. இருந்தபோதிலும் இங்கிலாந்து தரப்பில் இருந்து இதுவரையில் ஏன் இரண்டு லெஜெண்ட் வீரர்களும் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறித்து எந்த விதமான விளக்கமும் வெளியிடப்படவில்லை. இதன் காரணமாக இந்த சர்ச்சை இன்னும் பெரியதாக மாறிக் கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க : இது கடவுளின் திட்டம்.. நான் நம்பும் ஒரே மனிதர் அவர் மட்டும்தான்.. ஹோட்டல்ல இதான் நடந்தது – சிராஜ் பேட்டி

மேலும் தொடர் சமனில் முடிவடைந்த காரணத்தினால் தொடர் நாயகன் விருதை இரண்டு அணிகளின் பயிற்சியாளர்களும் தேர்ந்தெடுக்கும் முறை கொண்டுவரப்பட்டது. கம்பீர் புரூக்கை தேர்ந்தெடுக்க, மெக்கலம் கில்லை தேர்ந்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -