2 மணிக்கு வேண்டாம்.. உலகக்கோப்பை போட்டிகளை 11 மணிக்கே துவங்க வேண்டும்! – அஸ்வின் வித்தியாசமான கோரிக்கை! ஏன் என்றும் விளக்கம்!

0
3171

உலகக்கோப்பை போட்டிகளை 11 அல்லது 11:30 மணிக்கு துவங்க வேண்டும். அப்போது சில பிரச்சனைகளை தவிர்க்கலாம் என்று விளக்கத்துடன் பேட்டி அளித்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை இந்த வருடம் இந்தியாவில் நடைபெறுகிறது. இதற்கான அட்டவணைகளும் வெளியிடப்பட்டுவிட்டன. இந்திய அணிக்கு முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

- Advertisement -

மொத்தம் பத்து மைதானங்களில் உலகக்கோப்பை போட்டிகளும், அதற்கு முன்பு மூன்று மைதானங்களில் பயிற்சி போட்டிகளும் நடைபெறுகின்றன. ஒருநாள் போட்டிகள் வழக்கமாக இந்திய நேரப்படி 2 அல்லது 2:30 மணி வாக்கில் துவங்கும். பகல் போட்டிகள் சுமார் 9 அல்லது 9:30 மணிக்கு துவங்கும் என்கிற தகவல்கள் அனைவரும் அறிந்த விஷயம்.

இந்நிலையில் உலகக்கோப்பை போட்டிகள் 2 மணிக்கு முன்னரே துவங்க வேண்டும். 11 அல்லது 11.30 மணியளவில் சில பிரச்சனைகளை தவிர்க்கலாம் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.

“வழக்கமாக உலகக்கோப்பை போட்டிகள் கோடை காலத்தில் நடத்தப்படும். 2011இல் உலகக்கோப்பை பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் முதல் வாரம் வரை நடத்தப்பட்டது. அப்போது பனிப்பொழிவு பெரிதளவில் இருக்காது. ஆனால் இம்முறை வழக்கத்திற்கு மாறாக அக்டோபர் மாதம் உலகக்கோப்பை துவங்குகிறது. ஆகையால் போட்டியின் இரண்டாம் பாதியில் பனிப்பொழிவு இருக்கக்கூடும்.

- Advertisement -

இது சில அணிக்கு சாதகமாக இருக்கும் சில அணிகளுக்கு ஆபத்தாக முடியலாம். ஒட்டுமொத்தமாக எந்த அணியும் பாதிக்கப்படாதவாறு இருப்பதற்கு போட்டிகளை 11 அல்லது 11:30 மணிக்கு துவங்கினால் சரியாக இருக்கும். பனிப்பொழிவு வருவதற்குள் போட்டியை முடித்துவிடலாம். இதற்கு விதிகளில் அல்லது உலககோப்பையை நடத்தும் அணி நிர்வாகத்திடம் அதிகாரம் இருக்கும் பட்சத்தில் செய்ய வேண்டும் என்பதை கோரிக்கையாக வைக்கிறேன்.” என்றார்.

மேலும் பேசிய அவர், 10 வருடங்களாக இந்திய அணி கோப்பை இல்லாமல் இருப்பதை பற்றியும் பதில் கூறினார். “கடந்த இரண்டு உலககோப்பைகளாக இந்திய அணி கோப்பையை வெல்லும் முதன்மை அணியாக களம் இறங்கியது. துரதிஷ்டவசமாக அரை இறுதியில் வெளியேறியது. நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது.

- Advertisement -

இதற்கு இந்திய அணி மோசமாக செயல்பட்டது என்று காரணம் அல்ல. என்னதான் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணி என்று கருதினாலும், ஐசிசி போட்டிகள் இருதரப்பு தொடர்போல அல்லாமல் கடும் போட்டி நிறைந்ததாக இருக்கும். களமிறங்கும் பொழுது ஒவ்வொரு அணியும் தலா 50 சதவீதம் வாய்ப்புள்ள அணியாக தான் களமிறங்கும். இதில் கத்துக்குட்டி அல்லது பெரிய அணி என்று எதுவும் இல்லை.” என்று அஸ்வின் தெரிவித்தார்.