“நடப்பு உலக கோப்பையின் தொடர் நாயகன் விருது யாருக்கு? ” – தென் ஆப்பிரிக்கா கிப்ஸ் வித்தியாசமான தேர்வு!

0
1435
Gibbs

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர், இதுவரை நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களை விட பெரிய வெற்றி பெற்ற தொடராக அமைந்திருக்கிறது.

ரசிகர்களை மைதானத்திற்கு வரவழைத்த விதத்திலும், தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் வழியில் போட்டிகளை பார்த்த விதத்திலும், வருமானத்தின் அடிப்படையிலும் நடப்பு உலகக் கோப்பை தொடர் பெரிய வெற்றியடைந்திருக்கிறது.

- Advertisement -

இந்த உலகக் கோப்பை தொடரில் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் ஸ்மித், ஜோ ரூட், பாபர் அசாம் ஆகியோர் இன்னும் தங்களுடைய திறமைக்கு ஏற்றவாறு விளையாடாமல் இருக்கிறார்கள். காயத்தின் காரணமாக போட்டிகளில் விளையாடாத கேன் வில்லியம்சன் நல்ல நிலையில் இருக்கிறார். மேலும் டெங்கு காய்ச்சலால் இரண்டு போட்டிகளை தவற விட்ட கில் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் இன்னும் விளையாடவில்லை.

அதே சமயத்தில் அனுபவ வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் மிகச் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். போலவே தனது கடைசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாடும் குயிண்டன் டி காக் நான்கு சதங்களுடன் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இன்னொரு பக்கத்தில் தங்களுடைய அறிமுக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாடும் நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்தரா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் வேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் மார்க்கோ யான்சன் ஆகியோரும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் கிப்ஸ் இடம் சமூக வலைதளத்தில் ஒரு ரசிகர் நடப்பு உலகக்கோப்பையின் தொடர் நாயகன் விருதை யார் வெல்வார்கள் என்கின்ற கேள்வியை முன் வைத்தார். மேலும் அது மார்க்கோ யான்சனா என கேட்டிருந்தார்.

இதற்கு எளிமையாக பதில் சொன்ன கிப்ஸ் அதில் குயின்னி என்று கூறி இருக்கிறார். அதாவது குயிண்டன் டி காக் உலகக் கோப்பை தொடர் நாயகன் விருதை வெல்வார் என்று தெரிவித்திருக்கிறார்.

அதே சமயத்தில் தொடர் நாயகன் விருதை வெல்வதற்கான பட்டியலில் தாக்கம் மிகுந்த ஆட்டத்தை பந்துவீச்சில் வெளிப்படுத்தி வரும் இந்தியாவின் முகமது சமிக்கு பெரிய வாய்ப்பு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது!