ருதுராஜின் இடம் யாருக்கு?.. ரகானே புஜாரா மீண்டும் வருகிறார்களா?.. வெளியான இன்ட்ரஸ்டிங் தகவல்!

0
372
ICT

தற்போது இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் தென் ஆப்பிரிக்க அணியை அந்த நாட்டில் எதிர்த்து விளையாடி இருக்கிறது.

இந்த தொடரின் முதல் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் வருகின்ற டிசம்பர் 26 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இரண்டாவது போட்டி ஜனவரி 3ஆம் தேதி துவங்கி நடைபெறுகிறது.

- Advertisement -

இதற்கு முன்பாக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில், பீல்டிங் செய்யும் பொழுது, ருத்ராஜ் விரலில் காயம் அடைந்தார். இதன் காரணமாக அவர் மூன்றாவது போட்டியில் இடம் பெறவில்லை.

நேற்று ருத்ராஜ் விரலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக மேற்கொண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இந்திய அணியில் இருந்து வெளியேறுவதாக பிசிசிஐ அறிவித்தது. மேலும் அவர் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருப்பார் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் ருத்ராட்சியின் இடத்திற்கு இந்திய டெஸ்ட் அணியில் யாரை கொண்டு வருவார்கள் என்கின்ற கேள்வி தொடங்குவதற்கு, சில நாட்களே இருப்பதால் அதிகரித்து வருகிறது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இருந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருந்த ரகானே அதிரடியாக நீக்கப்பட்டார்.

மேலும் ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்ட புஜாராவுக்கும் மீண்டும் இடம் தரப்படவில்லை. இந்த நிலையில் இந்த இருவரில் ஒருவர் ருத்ராஜின் இடத்தில் இடம் பெறுவார்களா? என்கின்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

ஆனால் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு வேறு மாறியாக யோசித்து வருவதாக தெரிகிறது. பெங்கால் மாநில அனிக்காக விளையாடி வரும் 28 வயதான வலது கை பேட்ஸ்மேன் அபிமன்யு ஈஸ்வரனை ருதுராஜின் இடத்தில் அறிவிப்பதாக செய்திகள் வருகிறது. இவர் 88 முதல் தர போட்டிகளில், 22 சதங்கள் மற்றும் 26 அரை சதங்கள் உடன், 6537 ரன்கள் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!