ஆசிய கோப்பை உலக கோப்பையில் யார் அதிக ரன் அடிப்பார்கள்? – டிவிலியர்ஸ் பளிச் பதில்!

0
951
Devilliers

தற்பொழுது ஆசியக் கோப்பைத் தொடர் முதல் முறையாக ஹைபிரிட் முறையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை என இரு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது.

நடப்பு ஆசியக் கோப்பை தொடர் செப்டம்பர் 17ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. இதற்கு அடுத்து இந்தியாவில் நடத்தப்படும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ஆம் தேதி ஆரம்பித்து நவம்பர் 19ஆம் தேதி முடிவடைகிறது.

- Advertisement -

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வருகின்ற காரணத்தினால், வரவேற்பு குறைந்து இருந்த ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கு தற்பொழுது ரசிகர்களிடம் மீண்டும் வரவேற்பு கிடைக்க ஆரம்பித்து இருக்கிறது.

மிக முக்கியமாக உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக அடித்திருக்கும் 49 சதங்களை முந்தி உலகச்சாதனை செய்வதை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

மேலும் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆஸம் சீரான வெளிப்பாட்டை மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விராட் கோலி போல கொண்டு இருக்கிறார். மேலும் அவர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் மிகச் சிறந்த செயல்பாட்டை கொண்டு இருக்கிறார். எனவே ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் விராட் கோலி பாபர் ஆஸம் போட்டியை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் நடந்து கொண்டிருக்கும் ஆசிய கோப்பைத் தொடர் மற்றும் இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் யார் அதிக ரன்கள் குவிப்பார்கள்? என்கின்ற தனது கணிப்பை ஏ.பி.டிவில்லியர்ஸ் வெளியிட்டிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் அடிக்கக்கூடிய பேட்ஸ்மேன்களாக விராட் மற்றும் பாபர்தான் நிச்சயம் இருப்பார்கள். வேறு யாரும் அபாரமான ஃபார்மில் இருப்பதாக நான் பார்க்கவில்லை. இந்த இடத்தில்தான் விராட்டும் பாபரும் வித்தியாசமானவர்கள். அவர்கள் ரன் அடிக்கும் பொழுது 130 – 150 ரன்கள் அடிக்கிறார்கள். அதிக ரன் அடித்தவர்களுக்கான பட்டியலில் இவர்கள் பெயர்தான் இருக்கும். வேறு யாரையாவது அங்கு நான் பார்த்தால் மகிழ்ச்சியாக ஆச்சரியப்படுவேன்.

ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையில் யார் அதிக ரன்கள் அடிப்பார்கள் என்றால், இது மிகக் கடினமான கேள்வி. என்னால் இதற்கு பதில் சொல்ல முடியாது. இந்த போட்டியில் நிறைய பேர் இருக்கிறார்கள். ஃபார்மில் இருக்கும் பாபர், கேன் வில்லியம்சன், வெளிப்படையாக விராட் எங்காவது மேலே இருப்பார். அவர் 50 ஓவர் கிரிக்கெட் வடிவத்தை நேசிக்கிறார். நிச்சயமாக அவருடைய பெயரும் இருக்கும்!” என்று கூறியிருக்கிறார்!