நாளை யார் எந்தெந்த இடத்தில் விளையாடுவார்கள்? எப்படி விளையாடுவார்கள்? – ரோஹித் சர்மா திட்டவட்டமான தெரிவிப்பு!

0
2021
Rohit

நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் நாளை இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மிக முக்கியமான போட்டி நடைபெறுகிறது. இலங்கை மண்ணில் போட்டி நடைபெற்றாலும் கூட ரசிகர்கள், போட்டி நடைபெறும் ஹோட்டல்களை நிறைத்திருக்கிறார்கள்!

இந்திய அணியில் நடப்பு ஆசிய கோப்பை தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கு விக்கெட் கீப்பர் கே எல் ராகுல் விளையாட மாட்டார் என்று முன்பே தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு போட்டிகளுக்குப் பிறகு அவரது உடல் தகுதி எந்த அளவிற்கு இருக்கிறது என்று பார்த்துதான் எதுவும் முடிவு செய்ய முடியும் என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணியில் சஞ்சு சாம்சன் எப்படியும் சேர்க்கப்பட மாட்டார். ஏனென்றால் அணியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அறிவிக்கப்பட்ட அணியில் இருந்து ஒருவரை நீக்க வேண்டும் என்பது விதி. இதன் காரணமாக இஷான் கிஷான் விளையாடுவது உறுதியாக இருக்கிறது.

இசான் கிசான் விளையாடுகிறார் என்றால் துவக்க வீரரான அவரை எங்கு விளையாட வைப்பார்கள் என்கின்ற ஒரு கேள்வி இருக்கிறது. அவரை துவக்க இடத்தில் விளையாட வைத்தால், பல பேட்ஸ்மேன்களின் இடம் மாறும். இது உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணிக்கு சரியான திட்டமாக இருக்காது என்று எல்லோராலும் கூறப்பட்டது.

இந்த நிலைமையில் இன்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும்பொழுது “நேற்றைய ஆட்டத்தை பார்த்து எங்களுக்கு அதன் மூலம் எப்படியான அணியை கொண்டு வர வேண்டும் என்கின்ற ஐடியா கிடைத்திருக்கிறது. எங்கள் பேட்டிங் வரிசையில் நல்ல அனுபவம் இருக்கிறது. பேட்டர்கள் அதற்கேற்றபடி விளையாட வேண்டும். நாங்கள் ஆட்டத்தை எங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க முயற்சி செய்வோம். அதே சமயத்தில் நிலைமையை படிப்போம்.

- Advertisement -

எங்கள் அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் சமி மற்றும் சிராஜ் இருவரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். காயத்தில் இருந்து வந்த பும்ரா அயர்லாந்தில் நல்லவிதமாக செயல்பட்டார். தற்போது நடைபெற்ற பயிற்சி முகாமிலும் அவர் சிறப்பான நிலையிலே இருக்கிறார்.

நடப்பு ஆசியக் கோப்பை தொடர் வீரர்களின் உடல் தகுதியை சோதிக்கவும் மற்ற எதை சோதிக்கவும் கிடையாது. இது ஆசியாவின் முதல் ஆறு அணிகள் பங்கு பெறும் தொடர். இது எங்கள் அனைவருக்கும் மிக முக்கியமான தொடர். எனவே இங்கு பரிசோதனை முயற்சிகளுக்கு இடமே கிடையாது. நாங்கள் கடந்த காலங்களில் கிடைத்த ஒவ்வொரு தோல்வியில் இருந்தும் கற்றுக் கொண்டு இருக்கிறோம். கடந்த வருடத்தில் நிறைய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தோம். இதையெல்லாம் கொண்டு இந்த ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடுவோம். வெற்றிக்கு முக்கியத்துவம் தருவோம்.

இந்த தொடரில் நாங்கள் எங்களை நல்ல முறையில் வெளிக்கொணர வேண்டும். நாங்கள் ஆக்ரோஷமாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் நாங்கள் சூழ்நிலை எப்படி இருக்கிறதோ அதற்கு தகுந்தார் போல் இருக்க வேண்டும். நாங்கள் கிரீசில் சிறிது நேரம் ஒதுக்கி எங்களை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!

நடப்பு ஆசிய கோப்பை தொடரில் பரிசோதனை முயற்சிகள் ஏதும் செய்யப்படாது என்று ரோகித் சர்மா கூறியிருப்பதன் மூலம், கேஎல் ராகுல் விளையாடும் ஐந்தாவது இடத்தில் இஷான் கிஷான் விளையாடுவார், மற்ற அனைவரும் ஏற்கனவே அவரவர் விளையாடிய இடங்களில் விளையாடுவார்கள் என்பது தெளிவாகி இருக்கிறது!