ஆசிய கோப்பை இறுதிப்போட்டி மழையால் டிராவானால் யார் சாம்பியன்? வானிலை நிலவரம் என்ன? முழு தகவல்கள் இதோ!

0
9049
Rohit

இந்திய அணி இரண்டாவது சுற்றில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணியை வென்று இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறது.

போலவே இலங்கை அணி இரண்டாவது சுற்றில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளை வென்று இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறது.

- Advertisement -

இந்த இரு அணிகளும் ஆசியக் கோப்பை தொடரில் ஒன்பதாவது முறையாக இறுதிப் போட்டியில் மோதிக்கொள்ள இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் போட்டி நடக்க இருக்கும் இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தைச் சுற்றியான வானிலை அணிகள் மற்றும் ரசிகர்களுக்கு நல்ல செய்தியாக இல்லை.

போட்டி நடக்கும் நாளை ஞாயிறு என்பது சதவீதம் மைதான இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. இதனால் நிச்சயம் போட்டியில் மழையின் குறுக்கீடு இருக்கும்.

- Advertisement -

அதே சமயத்தில் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ரிசர்வ் டே அறிவித்திருக்கின்ற காரணத்தினால், போட்டி அடுத்து திங்கட்கிழமைக்கு நகரும்.

ஆனால் இங்குதான் ஒரு புதிய கவலை மேலும் உருவாகிறது. ஏனென்றால் திங்கட்கிழமை 90% சதவீத மழை வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை அறிக்கை கூறுகிறது.

இப்படி இரண்டு நாட்களும் மழை வந்து போட்டி நடைபெறாமல் கைவிடப்பட்டால், யாருக்கு ஆசிய சாம்பியன் பட்டம் கிடைக்கும்? என்கின்ற கேள்வி இருக்கிறது!

கடந்த முறை ஆசிய கோப்பையை வென்ற இலங்கை அணி தொடர்ச்சியாக ஆசியக் கோப்பை தக்க வைக்க வாய்ப்பு இருக்கிறதா? என்று பார்த்தால் கிடையாது. மேலும் மொத்தமாக போட்டி தொடரில் பெற்ற வெற்றிகள் மற்றும் ரன் ரேட் வைத்து சாம்பியன் யார் என்று முடிவு செய்யப்படுமா? என்றாலும் கிடையாது.

ஆசியக் கோப்பையில் இறுதிப்போட்டி ஏதாவது காரணங்களால் நடைபெறாமல் போனால், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இரண்டு அணிகளுக்கும் சாம்பியன் பட்டம் பகிர்ந்து அளிக்கப்படும். இரண்டு அணிகளுமே சாம்பியனாக அறிவிக்கப்படும். இந்த நடைமுறை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஏற்கனவே நடைமுறைப்படுத்திய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது!