விராட் ரோகித் வேண்டாம்னா.. கம்பீர் அகர்கர் ஆதாரம் கொடுக்கணும்.. விளையாட்டு காட்டக்கூடாது – அஸ்வின் கோபம்

0
0

நேற்று வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் அபாரமாக விளையாடிய விராட் கோலி வெறும் 88 பகுதியில் ஆட்டம் இழக்காமல் 139 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற்ற வைத்து ஆச்சரியப்படுத்தினார். இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.

மேலும் நேற்று 50 ஓவர்கள் பீல்டிங் செய்து விட்டு மீண்டும் களத்திற்கு பேட்டிங் செய்ய திரும்பி வந்து கொஞ்சமும் சோர்வு இல்லாமல் விளையாடியது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் 2027 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஒரு நாள் கிரிக்கெட் உலக கோப்பை இந்திய அணிகள் இடம் பெறுவார்களா? என்கின்ற விவாதம் தொடர்ந்து இருந்து வருகிறது.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “கவுதம் கம்பீரும் அகர்க்கரும் விராட் மற்றும் ரோகித் 50 ஓவர் அணியில் செட் ஆகமாட்டார்கள் என்று நினைத்தால் அதை சரியான ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். விராட் கோலி விஷயத்தில் இந்த பேச்சைக்கூட நாம் எடுக்கக் கூடாது. அவர் எவ்வாறு பேட்டிங் செய்கிறார் என்பதை மட்டும் பாருங்கள்”

- Advertisement -

“2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகு அடுத்த 24 மாதங்களுக்கான திட்டங்களில் இவர்கள் இருவரும் கட்டாயம் இருக்க வேண்டும். சச்சின் போன்ற ஜாம்பவான்களுக்கு விதிவிலக்கு அளித்தது போல விராட் மற்றும் ரோகித்திற்கும் செய்ய வேண்டும், இதில் அவர்களை நீக்குவதற்கு என்ன லாஜிக் இருக்கிறது” என்று கூறி முடித்தார்.

- Advertisement -